திருகோணமலையில் கடும் வறட்சி! சுமார் 400 குடும்பங்கள் பாதிப்பு...
திருகோணமலையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று அறிவித்துள்ளது.
வறட்சி காரணமாக 440 குடும்பங்களில் உள்ள 1381 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதேசசெயலக பிரிவுகளில் உள்ள குடும்பங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்துநகர் பகுதியில் 200 குடும்பங்களும், மங்கையோது பகுதியில் 225 குடும்பங்களும் மற்றும் வெலிகம பகுதியில் 15 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
திருகோணமலையில் கடும் வறட்சி! சுமார் 400 குடும்பங்கள் பாதிப்பு...
Reviewed by Author
on
December 28, 2016
Rating:

No comments:
Post a Comment