மாந்தை மேற்கு மற்றும் முசலி கால்நடை வளர்ப்பாளர்கள் 40 பேரூக்கு.....
கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் 'தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க திட்டத்தின்' கீழ் கால்நடை வளர்ப்பாளர்களின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட முசலி மற்றும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் 40 பேரூக்கு கால்நடைகளை அடைத்து பராமறிக்கும் கொட்டகைகள் அமைப்பதற்கான பொருட்கள் இன்று செவ்வாய்க்கிழமை(27-12-2016) வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
-மன்னார் உயிலங்குளம் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் தலைமையில் முதலில் முசலி வேப்பங்குளம் கால்நடை வைத்திய அலுவலகத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 கால்நடை வளர்ப்பாளர்களுக்கு கால்நடைகளை அடைத்து பராமறிக்கும் கொட்டகைகள் அமைப்பதற்கான பொருட்கள் வழங்கப்பட்டது.
-இதன் போது மாடு வளர்க்கும் பயணாளிகள் 10 பேரூம்,ஆடு வளர்க்கும் பயணாளிகள் 10 பேரூம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் ஒவ்வெருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கொட்டகைகள் அமைப்பதற்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த பயணாளிகள் 20 பேரூக்கும் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.
-குறித்த பொருட்களை வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் உயிலங்குளம் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர்,முசலி கால்நடை வைத்திய அதிகாரிகள் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 20 கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவு செய்யப்பட நிலையில் அவர்களுக்கு கொட்டகைகள் அமைப்பதற்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வு மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வண்ணாங்குளம் கால்நடை வைத்திய அலுவலகத்தில் இடம் பெற்றது.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட 20 பயணாளிகளில் ஆடு வளர்க்கும் 10 பயணாளிகளுக்கும்,மாடு வளர்க்கும் 10 பயணாளிகளுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கொட்டகைகள் அமைப்பதற்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்தை பொருட்களை வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் அதிகாரிகள் இணைந்து வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-

மாந்தை மேற்கு மற்றும் முசலி கால்நடை வளர்ப்பாளர்கள் 40 பேரூக்கு.....
Reviewed by Author
on
December 27, 2016
Rating:

No comments:
Post a Comment