அண்மைய செய்திகள்

recent
-

கிழக்கு மாகாண பதில் கடமைக்குரிய முதலமைச்சராக கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி....




ஈரான் மசான் டரான் மாணிலத்தின் ஆளுணரின் அழைப்பை ஏற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையிலான குழுவினர் ஈரான் மற்றும் ஐக்கிய அரப் அமீரகத்தில் (துபாய்) இடம்பெறும் விவசாயம், மீன்பிடி, சுற்றுலா துறைசார்ந்த மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று (26) அதிகாலை  ஈரான் சென்றுள்ளமையினால் முதலமைச்சின் பதில் கடமை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணியிடம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மாநாட்டுக்கு கிழக்கில் இருந்து முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், சபையின் தவிசாளர் சந்திரதாஷ கலபதி, திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள் பலரும் சென்றுள்ளனர்.

முதலமைச்சர் உத்தியோகபூர்வமான பயனமாக அங்கு சென்றமையின் காரணத்தினால் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி பதில் கடமைக்குரிய முதலமைச்சராக முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத் வரும்வரை   கிழக்கு மாகாண ஆளுணரினால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண பதில் கடமைக்குரிய முதலமைச்சராக கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி.... Reviewed by Author on December 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.