வடக்கில் செயற்கை கள் விற்பனையை தடைசெய்யத் தீர்மானம்...
தென்னிலங்கையில் இருந்து வடக்கு மாகாணத்திற்குள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படும் செயற்கை “கள்” விற்பனையை தடை செய்யும் தீர்மானம் வடமாகாண சபையின் 74ஆம் அமர்வில் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், மாகாண பனை, தென்னை வள கூட்டுறவு சங்கங்களில் செயற்கை கள் விற்பனைக்கு உடனடியாக தடை விதிக்கப்படுகின்றது.
வடமாகாண சபையின் 74ஆம் அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது மாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மேற்படி தீர்மானத்திற்கான பிரேரணையை சபைக்கு முன்மொழிந்தார்.
பிரேரணையை முன்மொழிந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
மாகாண பனை, தென்னை வள கூட்டுறவு சங்கங்கள் அதன் அங்கத்தவர்களால் இயங்கையாக உற்பத்தி செய்யப்படும் பனஞ்சாறு சார் உற்பத்திகளை விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்டது.
ஆனால் மிக இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு செயற்கை முறையில் நொதிக்க வைக்கப்படும் செயற்றை கள்ளை வடக்கில் சில பனை, தென்னை வள கூட்டுறவு சங்கங்கள் விற்பனை செய்கின்றன.
இந்நிலையில் மாகாணத்தில் உள்ள பனை தென்னை வள கூட்டுறவு சங்கங்கள் மேற்படி கள் விற்பனையை முழுமையாக தடைசெய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.
இந்த பிரேரணைக்கு ஒரு உ றுப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மற்றைய உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் விடயம் தொடர்பாக கூட்டுறவு அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
தென்னிலங்கையில் இருந்து வரும் செயற்கை கள் விற்பனையின் பின்னணியில் மாபியா குழுக்களை ஒத்ததான குழுக்கள் இயங்கி கொண்டிருக்கின்றன.
குறிப்பாக வடமராட்சி கிழக்கு பகுதியில் கூட்டுறவு சங்கம் ஒன்றுக்கு வெளியே ஒரு தொகுதி செயற்கை கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.
அது தொடர்பாக குறித்த கூட்டுறவு சங்கத்தின் தலைவரிடம் விசாரிக்கப்பட்டபோது அந்த பிரதேசத்தில் உள்ள மதுவரி திணைக்கள அதிகாரி ஒருவரே மேற்படி செயற்கை கள்ளை விற்பனை செய்யும் படி அச்சுறுத்தியுள்ளார்.
அதே மதுவரி திணைக்கள அதிகாரிக்கு மது பாவனையை குறைத்தமைக்காக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து ஜனாதிபதி விருது வழங்கினார் எனவும் அமைச்சர் கூறினார்.
வடக்கில் செயற்கை கள் விற்பனையை தடைசெய்யத் தீர்மானம்...
Reviewed by Author
on
December 28, 2016
Rating:

No comments:
Post a Comment