அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு மனு...


தமக்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்பட்ட 2013ஆம் ஆண்டு 07ஆம் மாதம் 01ஆம் திகதியில் திகதியிலிருந்து தம்மை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்த்து அக்காலப் பகுதியிலிருந்தே தமக்கான சம்பள நிலுவைக் கொடுப்பனவுகளும் கிடைக்க ஆவன செய்யுமாறு கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு இன்று(28) மனு ஒன்றைக் கையளித்துள்ளார்கள்.

யாழ் கைதடியிலுள்ள வடக்கு மாகாண பேரவைச் செயலகத்திற்குச் சென்ற வவுனியா உதவி ஆசிரியர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடாக வடக்கு மாகாண முதலமைச்சருக்கான தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்துள்ளனர்.

இந்த மனுவின் பிரதியை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசாவுக்கும் அனுப்பி வைத்துள்ளார்கள்.

வவுனியா உதவி ஆசிரியர் ஒன்றியத்தால் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட மனுவில் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வவுனியா பகுதிகளில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஆசிரியர் சேவையாற்றி வரும் எம்மை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் பயிற்றப்பட்ட பின்னரும் இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கப்படாமல் எமது சம்பளமும் அதிகரிக்கப்படாத நிலையில் நாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட காலமாகச் சேவையாற்றி வந்த எமக்கான ஆசிரியர் நியமனம் கடந்த காலங்களில் வழங்கப்படாது நாம் புறக்கணிக்கப்பட்டோம். அந்த நிலையே தொடர்ந்தும் இப்போதும் காணப்படுகின்றது என கூறப்படுகின்றது.

கடந்த 2003 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் வடமாகாணத்திற்கு வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனத்தின் போதும் வவுனியா பகுதியைச் சேர்ந்த எமக்கு மட்டும் தான் நியமனம் வழங்கப்படவில்லை.

எமக்கான நியமனத்தை வழங்குமாறு கோரி நாம் மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக கடந்த 2013ஆம் ஆண்டு 07ஆம் மாதம் 01ஆம் திகதி எமக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவதாகக் கூறி ஆசிரிய உதவியாளர் என்னும் நியமனம் வழங்கப்பட்டு மிகக் குறைந்த சம்பளமே எமக்கு வழங்கப்பட்டது என அறிவிக்கப்படுகின்றது.

எமது வயது, சேவைக் காலம், சேவை உறுதிப்படுத்தல், பதவி உயர்வு என்பவற்றினைக் கருத்திற் கொண்டு எமக்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்பட்ட 01.07.2013 ஆம் திகதியிலிருந்து எம்மை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்புச் செய்து எமக்கான சம்பள நிலுவைக் கொடுப்பனவுகளையும் அக்காலப் பகுதியிலிருந்தே கிடைக்க ஆவன செய்யுமாறு தங்களை மிகுந்த நம்பிக்கையோடும் எதிர்பார்ப்புக்களோடும் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு மனு... Reviewed by Author on December 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.