அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 'சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல்' எனும் தொனிப்பொருளில் சர்வமதத்தலைவர்களை உள்ளடக்கி விசேட கலந்துரையாடல்-📷

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டிலும்மன்னார் சமாதானத்திற்கும் மீள் இனக்கத்திற்குமான வழங்கள்(ஆர்.பி.ஆர்) அமைப்பின் அனுசரனையுடன் 'சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல்' எனும் தொனிப்பொருளில் சர்வமதத்தலைவர்களை உள்ளடக்கி மன்னார் முருங்கன் டொன் பொஸ்கோ கேட்போர் கூடத்தில் இன்று புதன் கிழமை(14) காலை விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.

-இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எப்.நிக்ஸன் குரூஸ், மன்னார் சமாதானத்திற்கும் மீள் இனக்கத்திற்குமான வழங்கள்(ஆர்.பி.ஆர்) நிறுவனத்தின் மாவட்ட திட்ட முகாமையாளர் வி.ஸ்.செல்வநந்தராஜா, மற்றும் அழைக்கப்பட்டவர்கள் சார்பாக சர்வமதத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள்,கிராம மட்ட பிரதி நிதிகள்,என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டிலும் மன்னார் சமாதானத்திற்கும் மீள் இனக்கத்திற்குமான வழங்கள்(ஆர்.பி.ஆர்) அமைப்பின் அனுசரனையுடன் 'சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல்' எனும் தொனிப்பொருளில் மாவட்டங்கள் தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் இன நல்லிணக்கம் தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

-மேலும் இலங்கையில் இடம் பெற்ற முரண்பாடுகளின் பின்னர் ஏற்பட வேண்டிய நல்லிணக்கத்திற்காகவும்,சமூக ஒத்திசைவிற்காகவும் சமயங்களுக்கிடையில் மக்களுடன் மக்கள் இணைந்து செயற்படுவதினை வலுப்படுத்துதல் போன்றவை தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






மன்னாரில் 'சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல்' எனும் தொனிப்பொருளில் சர்வமதத்தலைவர்களை உள்ளடக்கி விசேட கலந்துரையாடல்-📷 Reviewed by NEWMANNAR on December 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.