மின்சாரம் தாக்கி உடல் கருகி இளைஞன் பலி : நுவரெலியாவில் பரிதாபம்
மின்சாரம் தாக்கியதில் கட்டிட பணியாளர் ஒருவர் உடல் கருகி மரணமடைந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை உலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய மல்சான் ஜயரத்ன அப்புகொட என்பவரே இவ்வாறு மரணமானார்.
நுவரெலியா நகரில் 230 அறைகளை கொண்ட ஹோட்டல் கட்டிடமொன்று புதிதாக நிர்மாணிக்கப்படுகின்றது.
இக்கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபடும் குறித்த இளைஞன் நேற்றிரவு 8 மணியளவில் தற்காலிக தங்குமிட அறையில் தண்ணீர் சுடவைக்க மின்சாரத்தை பயன்படுத்த முற்பட்ட போது மின்சாரம் தாக்கி ஸ்தலத்திலேயே மரணமானதாக தெரியவருகின்றது.
மரணமான இளைஞருடன் அறையிலிருந்த இருவருக்கும் எவ்வித பாதிப்புகளும் இல்லை என்றும் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணை நுவரெலியா பொலிஸார் தெடர்வதாகவும் தெரிவித்தனர்.
மின்சாரம் தாக்கி உடல் கருகி இளைஞன் பலி : நுவரெலியாவில் பரிதாபம்
Reviewed by NEWMANNAR
on
December 16, 2016
Rating:

No comments:
Post a Comment