அண்மைய செய்திகள்

recent
-

இளம்பெண்ணின் தலையை வெட்டி எறிந்த தலிபான்கள்: பதற வைக்கும் காரணம்...


ஆப்கானிஸ்தானில் கணவன் உடன் செல்லாமல் தனியாக சந்தைக்கு சென்று வந்த பெண்ணை தலிபான்கள் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் SarePul மாகாணத்தின் Latti என்ற கிராமத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் தன் கணவர் உதவி இல்லாமல் சந்தைக்கு சென்று வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி அக்கிராமம் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக கூறப்படுகிறது.

தலிபான்களின் கட்டுப்பாட்டு விதிப்படி, ஒரு பெண் தன் கணவர் உதவியின்றி எங்கும் வெளியில் செல்லக்கூடாது, திருமணம் ஆகாதவர்கள் தன்னுடைய ஆண் உறவினர்கள் யாரையாவது கூட்டிச் செல்ல வேண்டும்.

அதே போன்று அக்கிராமத்தில் உள்ள பெண்கள் படிப்பதற்கும், வேலைக்கும் போவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக அவர்கள் புர்கா மட்டுமே அணிய வேண்டும், வீட்டை விட்டு வெளியேறுவதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி ஒரு பெண் செயல்பட்டாள் , அவர் உடனடியாக தண்டிக்கப்படுவார்.

கணவன் துணையின்றி சென்றுவந்த இப்பெண்ணை தலிபான்கள் கொண்ட குழுவினர் தலையை துண்டித்துள்ளனர்.

அப்பெண் அந்த இடத்தில் துடிதுடிக்க இறந்துள்ளார், அவரின் கணவர் ஈரானில் உள்ளார் என்றும், குழந்தைகள் எதுவும் கிடையாது எனவும் கூறப்படுகிறது.

இதை கவர்னர் Zabiullah Amani யும் உறுதி செய்துள்ளார். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இளம்பெண்ணின் தலையை வெட்டி எறிந்த தலிபான்கள்: பதற வைக்கும் காரணம்... Reviewed by Author on December 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.