யாழ் பல்கலை மாணவர்கள் சுட்டுக்கொலை குற்றப்பத்திரிகை நீதிமன்றில் சமர்ப்பிப்பு
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸாரின் விளக்கமறியல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் சந்தேக நபர்களான 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் இருந்து வரும் வேளை இன்று மீண்டும் வழக்கு விசாரணை பதில் நீதவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொல்லப்பட்ட மாணவர்கள் சார்பில் சட்டத்தரணி தி.கணதீபன் ஆஜராகியிருந்தார். சந்தேக நபர்கள் சார்பில் எவரும் இன்று ஆஜ ராகியிருக்கவில்லை. இதில் குற்றப்புலனாய்வு பிரிவினர் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை மன்றில் சமர்ப்பித்ததுடன் வழக்கை பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
இதனடிப்படையில் வழக்கை வருகின்ற 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் சந்தேக நபர்களின் விளக்கமறியலை 30ஆம் திகதி வரை நீடித்து தீர்ப்பளித்தார்.
யாழ் பல்கலை மாணவர்கள் சுட்டுக்கொலை குற்றப்பத்திரிகை நீதிமன்றில் சமர்ப்பிப்பு
Reviewed by NEWMANNAR
on
December 16, 2016
Rating:

No comments:
Post a Comment