அண்மைய செய்திகள்

recent
-

யாழ். மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! விபரம் உள்ளே....


திருவாதிரை திருவிழாவிற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து சிதம்பரத்துக்கு கப்பல் சேவை நடாத்த இலங்கை மற்றும் இந்திய அரசுகள் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழம் சிவசேனை அமைப்பாளர் மறவன்புலவு சச்சிதானந்தன் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பௌத்தர்கள் வழிபாட்டுப் பயணமாகக் கயா செல்ல அரசு வசதிகள் செய்கிறது. கிறிஸ்தவர்கள் வழிபாட்டுப் பயணமாக ஜேருசலேம் செல்ல அரசு வசதிகள் செய்கிறது. இஸ்லாமியர் வழிபாட்டுப் பயணமாக மக்கா செல்ல அரசு வசதிகள் செய்கிறது.

சைவர்கள் வழிபாட்டுப் பயணமாகத் திருவாதிரைக்குச் சிதம்பரம் செல்ல அரசு வசதி செய்யவேண்டுமென வடக்கு ஆளுநரிடம் சிவசேனை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சருக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியிருந்தார். சைவர்களுக்காகத் திருவாதிரைக்குச் சிதம்பரத்துக்குக் கப்பல் விட பாதுகாப்பு அமைச்சுக்கும் கலாச்சார அமைச்சுக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

இதன் பலனாக காங்கேசன்துறை காரைக்கால் கப்பல் சேவை திருவாதிரைக்குக் சாத்தியக்கூறு இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2000 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்துச் சைவர்களும் திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் கூடி வழிபட்டு வருவதாகவும் ஈழத்தவர் தங்குவதற்காக, ஞானப்பிரகாசர் குளத்தைச் சுற்றி ஈழத்தவர் தம் செலவில் அமைத்து அறம் வளர்க்கும் 30 திருமடங்கள் சிதம்பரத்தில் 300 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளதாகவும் அச்செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


யாழ். மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! விபரம் உள்ளே.... Reviewed by Author on December 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.