கடற்படையினரின் தேவைக்காக காணிகள் எடுக்கப்படவுள்ளதாக அறிவிப்பு
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிராம அலுவலகர் பிரிவிற்கு உட்பட்ட வட்டுவாகல், வெள்ளாம் ஆகிய இடங்களில் கடற்படையினரின் தேவைக்காக காணிகள் எடுக்கப்படவுள்ளதாக காணி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த காணிகளின் உரிமையாளர்கள் அதனை எடுத்துக்கொள்வதற்கு மறுப்பு தெரிவித்தால் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்பாக காணி அமைச்சின் செயலாளருக்கு 4-3/4/2013/D/213 இலக்கத்தின் சார்பாக எழுத்து மூலம் அறிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பிரதான கடற்படை முகாம் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அழுவலகர் பிரிவின் கீழ் இதுவரை 34 பேர் காணிகள் தமக்கு செந்தமானது என உரிமைகோரியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடற்படையினரின் தேவைக்காக காணிகள் எடுக்கப்படவுள்ளதாக அறிவிப்பு
Reviewed by NEWMANNAR
on
December 07, 2016
Rating:

No comments:
Post a Comment