வன்னிப் பிராந்திய சமூதாய பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் மன்னாரில் இடம் பெற்ற இலவச மருத்துவ முகாம்.Photos
இலங்கை பொலிஸின் 150 ஆவது வருட நிறைவையொட்டி மன்னாரில் வன்னிப் பிராந்திய சமூதாய பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் பள்ளிமுனை புனித லூசியா ம.வி பாடசாலையில் விசேட மருத்துவ முகம் இன்று (3) சனிக்கிழமை காலை ஆராம்பமானது.
குறித்த மருத்துவ முகாமை வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்விற்கு விருந்தினராக மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை,மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமேல் உற்பட திணைக்கள அதிகாரிகள்,பொலிஸ் உயர் அதிகாரிகள்,சர்வமதத்தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு,சிகிச்சை களும் வழங்கப்பட்டது.
மேலும் இலவச கண்ணாடிகள் வழங்கள்,கர்ப்பினித்தாய்மார்களு க்கு சத்துணவுப்பொதிகள் என்பனவும் வழங்கப்பட்டது.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த மருத்துவ முகாமில் சுமார் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வன்னிப் பிராந்திய சமூதாய பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் மன்னாரில் இடம் பெற்ற இலவச மருத்துவ முகாம்.Photos
Reviewed by NEWMANNAR
on
December 04, 2016
Rating:
No comments:
Post a Comment