மக்கள் பணத்தை விரயம் செய்யாது நத்தார் மரம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிடையாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்
பொதுமக்கள் பணத்தை விரயம் செய்யாது நத்தார் மரணம் அமைப்பதற்கு தடையில்லை என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் பாரியளவில் நத்தார் மரம் அமைக்கப்படுவது குறித்து கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
காலி முகத்திடலில் அமைக்கப்பட்டு வரும் பாரிய நத்தார் மரத்திற்கு 200 மில்லியன் ரூபா பணம் செலவிடப்படுவதாக செய்யப்பட்ட பிரச்சாரம் காரணமாகவே நான் அதனை எதிர்த்தேன்.
எனினும் இந்த நத்தார் மரத்தை அமைப்பதற்கு 12 மில்லியன் ரூபா பணமே செலவிடப்படுகின்றது என அறிந்து கொண்டேன்.
நத்தார் மரத்தை எந்த இடத்திலும் எவரும் உருவாக்க முடியும். அதற்கு தடையில்லை. எனினும் பொதுமக்கள் பணத்தை விரயமாக்கி நத்தார் மரம் அமைப்பதனை எதிர்க்கின்றேன்.
செலவிடப்படும் தொகை வறியவர்களுக்கு வழங்குவது மிகவும் அவசியமானது.
நத்தார் மரம் தொடர்பில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்தது இணக்கப்பாடு எட்டப்பட்டது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கதிர்தினாலின் கோரிக்கைக்கு அமைய நத்தார் மரம் அமைக்கும் பணிகள் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் நேற்றைய தினம் முதல் மீளவும் நத்தார் மரம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உலகின் மிகப் உயரமான நத்தார் மரம் என்ற கின்னஸ் சாதனையை உருவாக்கும் நோக்கில் மரம் அமைக்கப்பட்டு வருகின்றது.

Reviewed by NEWMANNAR
on
December 13, 2016
Rating:

No comments:
Post a Comment