அண்மைய செய்திகள்

recent
-

உலக அளவில் சாதனை படைத்த இலங்கை மாணவர்கள்


உலக அளவில் பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட செஸ் சாம்பியன்சிப் போட்டியில் (Chess Championship), 13 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவில் போட்டியிட்ட இலங்கையை சேர்ந்த மாணவன் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனைப்படைத்துள்ளார்.

குருநாகலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் ஹர்ஷண திலகரத்ன என்ற சிறுவனே பதக்கம் வென்றுள்ளார்.

குறித்த சிறுவன், உஸ்பெகிஸ்தான் நாட்டு சிறுவனுடன் போட்டியிடும் போது 0.5 புள்ளியில் தங்கப் பதக்கம் வெல்ல தவறவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2014 ஆம் ஆண்டு பிரேசிலில் இடம்பெற்ற செஸ் சாம்பியன்சிப் போட்டியில் 10 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவில் போட்டியிட்ட குறித்த சிறுவன் தங்கப் பதக்கம் வென்று சாதனைப்படைத்தார்.

மேலும், கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் Niklesha Tharushi என்ற மாணவி, 13 வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்கள் பிரிவில் போட்டியிட்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

ரஸ்யாவில் இடம்பெற்ற செஸ் போட்டியில் Niklesha Tharushi என்ற மாணவி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

13 வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்கள் பிரிவில் போட்டியிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த Naomi Bashkansky என்ற மாணவி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.

உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற செஸ் சாம்பியன்சிப் போட்டியில் குறித்த மாணவர்கள் இருவரும் பங்குபற்றி இலங்கைக்கு பெறுமை சேர்த்துள்ளனர்.

குறித்த போட்டியில் இலங்கையில் உள்ள 30 தேசிய மட்ட பாடசாலைகளில் உள்ள செஸ் விளையாட்டாளர்கள் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.




உலக அளவில் சாதனை படைத்த இலங்கை மாணவர்கள் Reviewed by Author on December 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.