அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர பாதுகாப்பு அவதான நிலையத்தை வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் திறந்து வைப்பு-


இலங்கை பொலிஸின் 150 ஆவது வருட நிறைவையொட்டி மன்னாரில் அமைக்கப்பட்ட மன்னார் நகர பாதுகாப்பு அவதான நிலையத்தை வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று (3) சனிக்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

மன்னார் நகர் பகுதியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும்,இடம் பெறுகின்ற குற்றச் செயல்களை அவதானிக்கும் வகையிலும் நகர் பகுதியில் பொறுத்தப்பட்ட பாதுகாப்பு கெமராக்களின் அவதான நிலையமான குறித்த நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இதே வேளை இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக மன்னார் பகுதிக்கு கொண்டு வரப்படுகின்ற கஞ்சா மற்றும் ஹேரோயின் போதைப்பொருற்கள் போன்றவற்றினை தடுக்கும் புதிய பொலிஸ் பிரிவு இன்று (3) தமது கடமைகளை பெறுப்பேற்றுள்ளது.

குறித்த பொலிஸ் பிரிவினர் மன்னார் கடற்பகுதியில் படகுகள் மூலம் றோர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து மன்னார் நகர் பகுதிக்குள் போதைப்பொருட்களை கடத்தும் நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் குறித்த பொலிஸ் பிரிவினர் செயற்படவுள்ளனர்.

-கடல் றோந்ந்து பணியில் ஈடுபட தெரிவு செய்யப்பட்ட விசேட பொலிஸ் பிரிவினருக்கு வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து கடல் றோர்ந்து பணி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்,மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்,உதவி பொலிஸ் அத்தியட்சகர்,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சர்வ மத குருக்கள் உள்ளிட்டோர் கடல் றோந்து பணியில் வைபவ ரீதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்,,,,

மன்னார் கடற்படை மற்றும் பொலிஸ் பிரிவுக்குள் கடற்படை நிலையம் ஒன்றை ஆரம்பித்து வைத்துள்ளோம்.

இந்த நிலையத்திற்கு இரண்டு படகுகளைக் கையளித்துள்ளோம். இந்தப் பிரதேசத்தின் ஊடாக கடல் வழியாக ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் இலங்கைக்குள் கடத்தி வரப்படுவதைத் தடை செய்யும் நோக்கத்துடன், கடலோரத்தில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.

பொலிஸ் மா அதிபருடைய உத்தரவுக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மன்னார் நகர்ப்பகுதியில் சிசிரிவி கமரா பொருத்தப்பட்ட 24 மணிநேர கண்காணிப்பு நிலையம் ஒன்றையும் திறந்து வைத்துள்ளோம்.

ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா கடத்தல்களை முறியடிப்பதற்கு இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. என தெரிவித்தார்.















மன்னார் நகர பாதுகாப்பு அவதான நிலையத்தை வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் திறந்து வைப்பு- Reviewed by NEWMANNAR on December 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.