பயங்கரவாதிகள் சதி திட்டமா? 7 பேர் பிணைக்கைதியாக சிறைபிடிப்பு!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 7 பேர் துப்பாக்கி முனையில் பிணைக்கைதியாக சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Massena boulevard பகுதியில் உள்ள Asieland நிறுவனத்தில் நுழைந்த மர்ம நபர் ஒருவன் 7 பேரை துப்பாக்கி முனையில் சிறைபிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பொலிசார் வெளியிட்டுள்ள பதிவில், பாரிஸ் சுற்றுலா நிறுவனத்தில் கை துப்பாக்கியுடன் நுழைந்த திருடன் 7 பேரை பிணைக்கைதியாக சிறைபிடித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது ஆயுதமேந்திய கொள்ளையனிடம் இருந்து 7 பேரை மீட்கும் முயற்சியில் ஈடுபபட்டுக்கொண்டிருப்பதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்காக சம்பவயிடத்திற்கு இராணுவ வீரர்களும் மற்றும் ஆராய்ச்சியாளர்களும் விரைந்துள்ளனர். குறித்த கட்டிடத்தில் கடந்த காலத்தில் ஆயுத கொள்ளை ஒன்று இடம்பெற்றுள்ளது நினைவுக் கூரதக்கது.
எனினும், தாக்குதலுக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்புள்ளதாக இதுவரை எந்த ஆதாரமும் வெளியாகவில்லை.
பயங்கரவாதிகள் சதி திட்டமா? 7 பேர் பிணைக்கைதியாக சிறைபிடிப்பு!
Reviewed by Author
on
December 03, 2016
Rating:

No comments:
Post a Comment