அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இணையத்தின் விம்பம் பகுதியில் ..இருள் சூழ்ந்த வானத்தில் ஓர் வெள்ளி...மாற்றுத்திறனாளி எஸ்.சப்திக்காவுடனான நேர்காணல்

மன்னார் இணையத்தின் விம்பம் பகுதியில் 

கலைஞனின் அகம் கணணியில் முகம்........
எல்லாம் நல்லாய் உள்ளவர்களே இல்லாதவர்களாய் இருக்கின்றார்கள் உள்ளத்திலும் உடலாலும் ஊனமுற்றவர்களாய்…

இப்பகுதியில் எம்மோடு பேசவருகின்றார் திறமை மிகு இளம் மாற்றுத்திறனாளி  அவளது தோற்றம் கண்டவுடன் கலங்கியது கண் சின்னபெண் மனதில் ஆயிரம் கேள்விக்கணைகள் ஆனால் எதவுமே பேசமுடியவில்லை எதைக்கேட்பது…. எப்படிக்கேட்பது…. ஏழெட்டு நிமிடங்கள் கடந்தன பார்வையை மட்டும் வீசியவாறு இருக்ககையில் அந்த சின்ன பெண்ணே என்ன அண்ணே..... சொல்லுங்க என்றாள்…..

 நியூமன்னார் இணையத்தில் இருந்து வந்திருக்கின்றோம் கமெராவை கண்டதும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை மௌனமாய் இருந்தாள் நான் தொடர்ந்தேன் கலைஞர் சந்திப்பிற்காய் வந்திருக்கின்றோம் உங்களின் திறமையினை மற்றவர்களுக்கும் வெளிக்கொண்டுவருவதற்காகவே என்றதும் சின்னபுன்னகை முகத்தில்…. கிளம்பியது வார்த்தைகள் அகத்தில்…….

உங்களைப்பற்றி-----
எனது பெயர் எஸ்.சப்திக்கா அப்பா சத்தியசீலன் அம்மா யூடிற் எனது சகோதரிகள் நிலோபர் ஜெனி-சாம்சிக்கா நான் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தில் 8ம் தரத்தில் கல்வி கற்கின்றேன்.

நீங்கள் சொல்ல விரும்புவது---

நான் இவ்வாறு இருந்தும் என்னை எந்தவிதக்குறையும் இல்லாமல் வைத்திருக்கும் இயேசப்பாவிற்கும் எனது பெற்றோருக்கும் முதலில் நன்றி கூறுகின்றேன் எனது சகோதரிகள் எனது நண்பர்கள் நண்பிகள் எனது பாலர்வகுப்பாசிரியர் சர்மிளா மற்றும் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் எல்லாவற்றையும் விட எனது அம்மப்பாவிற்கும் இன்னும் பல வழிகளில் உதவிகள் புரிந்து ஊக்கமளிக்கும் அனைவருக்கும் எனது பாராட்டுக்களும் நன்றியும்
சப்திக்கா பிறந்திருக்கும் போது உங்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என தந்தை சத்தியசீலனிடம் கேட்டபோது…
மருத்துவர் அருகில் வந்து உங்களுக்கு அழகான பெண்குழந்தை பிறந்துள்ளது என்றார் மனமகிழ்ச்சியடையுமுன்னர் இன்னும் அருகில் வந்து கை கொஞ்சம் சின்னதாக உள்ளது.என்றார். சின்னக்கையென்றால் என்னுடைய குழந்தையை காட்டுங்கள் என்றேன்.எனது குழந்தையை கண்டதும் எல்லாப்பெற்றோர்களும் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் ஆனால் எனக்கு மனம் ஒரு நொடியில் நொருங்கியது என்ன செய்வதென்றே தெரியவி;ல்லை கலங்கிப்போனேன் தனியே இருந்து அழுதேன் சிந்தித்தேன் எனது மனைவியுடன் இது எங்களுடைய பிள்ளை நாங்கள் தான் இவளை வளர்க்கவேண்டும் எல்லாம் இறைவன் செயல் என்றேன் நாங்கள் கிறிஸ்த்தவர்கள் ஒருவன் தாங்கும் சுமையைவிட அதிகமான சுமையை சுமத்தமாட்டார் கிறிஸ்த்து இது எமது இறைவாக்கு அதன் படியே நடக்கிறது.

தந்யையைவிட பத்து மாதம் சுமந்து பலகனவுகளோடு பிள்ளை பெற்றெடுக்கும் தாய்க்கு வேதனை அதிகம் தான் தாய் யூடிற்றாவிடம் கேட்டபோது----
எனது மகளை வெளிச்சத்தில் வைத்திருக்கின்றார்கள் வெள்ளை நிறத்தில் வடிவாக இருக்கின்றாள் அதிகமான வைத்தியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்காட்சி பார்ப்பது போல் கூடியிருக்கின்றார்கள் என்னவென்று கேட்டேன் எவருமே எதுவுமே சொல்லவே இல்லை மருத்துவர் அருகில் வந்து உங்கள் பரம்பரையில் யாராவது ஊனமாக பிறந்திருக்கின்றார்களா…??? என பல கேள்விகளை கேட்டுவிட்டு உமக்கு பிள்ளை வேணுமா...??? வேணாமா…??? ஏன்றார் ஏன் டொக்ரர் இப்படிக்கேட்கிறிங்க என்று கேட்டேன் உமது பிள்ளைக்கு இருகைளும் இல்லை வலது காலில் மூன்று விரல்களும் இடது காலில் இரண்டு விரல்களும் தான் உள்ளது. நடக்கவும் தாமதம் ஆகும் உடல் நிலையும் மோசமாகவும் உள்ளது. இதயத்தில் சிறிய ஓட்டையுமுள்ளது என்றார். எனது இதயம் நின்று போனது மனம் கல்லாகிப்போனது அப்படியே திரும்பிப்பார்க்கின்றேன் எனது கணவர் எதிரில் அழுதுகொண்டிருக்கின்றார் அவரைக்கண்டதும் பெரும் சத்தத்தேடு கதறியழுது விட்டேன் அன்று அழுதது மட்டும் தான் அதன் பிறகு எனது மகளை நினைத்து அழுததே இல்லை அழப்போறதும் இல்லை இவள் எங்களுடைய மகள்…..

இப்பிள்ளையின் வளர்ச்சிக்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சி என்ன---
படுத்த படுக்கையாக இருந்தாள் எல்லாமே படுக்கையில் தான் இப்படியே வைத்து என்ன செய்வது ஆண்டவரின் வல்லமையால் நடக்க ஆரம்பித்துவிட்டாள் கையையும் இதயத்தில் இருந்த ஓட்டையையும் எப்படியாவது குணப்படத்தி விடலாம் என்று நோனா-அப்பலோ-நவலோக போன்ற வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்களிடமும் ஆலோசணையும் பெற்றோம் இப்போது எதுவுமே செய்ய வேண்டாம். பிள்ளை வளரட்டும் என்றார்கள் பல நிறுவனங்களிடமும் அமைப்புக்களிடமும் உதவயினை நாடினோம் பலனேதும் இல்லை குறிப்பாக மொறட்டுவ அன்னைத்திரேசா மடத்தினரால் ஆரம்பக்கட்ட பரிசோதனை மட்டுமே செய்யப்பட்டது. கடவுளின் கிருபையால் தற்போது இதயத்தில் இருந்து ஓட்டையும் மறைந்து விட்டது.இந்தக்கைக்கு மட்டும் தகுந்த உதவி கிடைக்குமானால் மனமகிழ்ச்சிக்குரிய விடையமே இவளுக்கென்று தனியானகத்தன் எல்லாவசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம்
chair comert-வவுனியா கல்வித்திணைக்களத்தின் அதிகாரி சுப்பிரமணியம் அவர்கள் அத்தோடு ஓகன் போன்ற உதவிகளையும் செய்தவர்களும் இருக்கின்றார்கள் எல்லாவற்றையும் செல்லிவிட முடியுமா…

மறக்கமுடியாத சம்பவம் ஏதும் உள்ளதா---
எனது மகளே மறக்கமுடியாதவள் தான் மாணவர்களை முதலாம் தரத்திற்கு வரவேற்கும் நிகழ்விற்கு நாங்கள் 10நிமிடம் தாமதமாகத்தான் போனோம் எதாவது சொல்லி அவமானப்படுத்துவார்கள் என்று காரணத்தினால் தான் ஆனால் அங்கு இயக்குநர் அதிபர் ஆசிரியர்கள் மாணவிகள் அனைவரும் மாலையும் கையுமாக எமது மகளுக்காய் காத்திருந்தனர் மாலை அணிவித்து விழா நாயகியாக வரவேற்றனர் விழாவினை தொடங்கிவைத்தாள் அப்போது எங்கள் கண்ணில் ஆனந்தக்கண்ணீர் நிரம்பியது.
 அதுபோலவே அகிலஇலங்கை பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் கொழும்புக்கு சென்றிருந்தோம் அங்கு வந்திருந்த மாணவர்களைப்பார்த்து நாங்களே பயந்து விட்டோம். போட்டி ஆரம்பமானது எமது மகளும் கலந்து கொண்டாள் போட்டி முடிவிற்காய் காத்திருக்கின்றோம் அந்த வேளையில் அகிலஇலங்கை வெற்றியாளர் சப்திக்கா என வெளிநாட்டு நடுவர் அறிவித்ததும் எல்லோரும் அதிர்ந்து போயினர் நாங்களும் தான் எனது மகளை சூழ்ந்து கொண்டது கூட்டம் அத்தோடு மட்டுமல்லாமல் எமது மகளிடம் ஓட்டோகிராப்பும் வாங்கியதோடு போட்டோவும் எடுத்துக்கொண்டனர் மீண்டுமொருமுறை ஆனந்தக்கண்ணீரில் எமது கண்கள் இன்னும் பல நிகழ்வுகள் உள்ளது….

இதுவரை உங்கள் மகளின் சாதனைகள் பற்றி---

Srilanka Annual Competivie Festivel Popular song Singalies,popular song English,story telling,verse speaking-1st –Greating card making 2nd All Islandwinner In-2010மேலும் கோலம் போடுதல் மாலைகட்டுதல் சித்திரம் வரைதல் பாடுதல் நடனமாடுதல் மனைப்போட்டி பண்ணிசைப்போட்டி எப்போட்டியானாலும் கலந்து கொண்டு 1ம் 2ம் இடங்களைப்பெற்றுவிடுவாள் படிப்பிலும் கெட்டிக்காறிதான்
இவளின் தனித்திறமையே ஓகன் வாசிப்பது தான் இலங்கை "தேசியகீதம்" "வாட மாப்பிள்ளை,என்ட மல்லிஎன்ட மல்லி,சுறாங்கனி" பழைய சினிமாப்பாடல்கள் கிறிஸ்த்தவப்பாடல்கள் இன்னும் பல பாடல்களைப்பாடி தங்கப்பதக்கம் சான்றிதழ்களும் பெற்றிருக்கிறாள்.

 கையெழுத்து அழகாய் இருந்தால் தலையெழுத்து.....
மும்மொழிகளும் தமிழ் சிங்களம் ஆங்கிலம் அழகாக கைகளால் அல்ல கால்களினால் எழுத்து எவ்வளவு அழகு தெரியுமா.....நம்மால் முடியுமா...உறுப்பெழுதல் போட்டியிலும் முதலாம் இடம் தான்


 எதிர்காலத்தில் என்னவாக வரவிரும்புகின்றீர்கள்---
நான் ஒரு இஞ்சினியராக வரவிரும்புகின்றேன் என்னால் முடியும் நான் இப்போது எட்டாம் தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றேன் பாடசாலையில் எனது வகுப்பில் நான்தான் முதலாம் பிள்ளை எனக்குத் தெரியும் கல்வியால் தான் இவ்வுலகை வெல்ல முடியும் அத்தோடு தாய்தந்தையின் ஆசிர்வாதமும் எனது இயேசப்பாவின் அருளும் எனக்கு கிடைக்கும் வெற்றி பெறுவேன் நம்பிக்கையுள்ளது நம்பிக்கைதான் வாழ்க்கை…

கடந்த 2013 ஆண்டு புலமைப்பரிட்சையில் என்ன பெறுபேறு பெற்றள்ளீர்கள்---
5ம்தரப்புலமைப்பரீட்சையில் 148புள்ளிகள் பெற்றேன். உயர் புள்ளி 156 ஆக இருந்தது நான் மேலதிக வகுப்பகளுக்கு செல்வதில்லை வீட்டில் இருந்து தான் படிக்கின்றேன் எனக்கு நம்பிக்கையுள்ளது நன் வெற்றி பெறுவேன்.

உங்களுக்கு என்ன தேவையான விடையம் பற்றி---
எனக்கு என்ன தேவையென்று எனது பெற்றோருக்கு தெரியும்; அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் அதனால் நான் எதைப்பற்றியும் கவலை கொள்வதில்லை எல்லாவற்றிற்கும் மேல் இயேசப்பா உள்ளார் பிறகேன் கவலை படுவானேன்.

எல்லாப்பிள்ளைகள் போல என்னையும் இயேசப்பா படைத்திருக்கலாமே ஏன் என்னை இப்படிப்படைத்தார் என்று இயேசப்பாமேல் கோபம் வரவில்லையா----
இல்லை இல்லை எல்லாத்திற்கும் ஒரு காரணம் உண்டு என்னைப்போலவே ஒரு பாஸ்ரர் இருக்கின்றார் வெளிநாட்டில் அவரும் என்னைப்போல தான் ஆனால் அவர் இப்போது பெரிய புகழ்மிக்க பாஸ்ரராக இருக்கின்றார். அவர் சொல்வார் இறைமக்களே இறைபிள்ளைகளே நாம் இவ்வாறு இருப்பதற்கும் வாழ்வதற்கும் ஒரு சிறப்புக்காரணம் உண்டு எமது பிறப்பானது ஒரு நோக்கத்தினை நிறைவேற்றுவதற்காகவே அதுவரை நாம் வாழ்ந்தாகவேண்டும் கவலைப்படவோ வெட்கப்படவோ தேவையில்லை தேவனிருக்கின்றார் அவர்பார்த்துக்கொள்வார்.

நீங்கள் உங்களைப்போல உள்ளவர்களுக்கு என்ன சொல்லவிரும்புகின்றீர்கள்….
என்னைப்போன்றவர்களுக்கு மட்டுமல்ல ஏனையவர்களுக்கும் சேர்த்துத்தான் என்று சொல்லி ஒரு பாடலை அழகிய குரலில் பாடினார் அவ்வாறே ஒகன் வாசித்துக்காட்டினார்,,,,,,,,
அங்கம் இல்லை என்று சொன்னால் ஊனமாகுமா
தம்பி அழகு என்று இல்லாவிட்டால் ஊனமாகுமா
உறுதி உள்ளம் மட்டும் இருக்கும் வரையிலே
தம்பி ஊனம் என்று எதுவும் இல்ல 

எழுந்து நில்லடா தம்பி..........
எழுந்து நில்லடா தம்பி........ தம்பி…..

மன்னார் மண்ணின் கலைஞர்களை கௌரவிக்கும் நியூமன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து….
உண்மையில் நல்ல பாரியசேவை இது மனமாரப்பராட்டுகின்றேன் எல்லாரையும் போல எனது மகளையும் வீட்டிற்கு வந்து பேட்டிகண்டு அவளின் திறமையை வெளியுலகிற்கு கொண்டு வருவது எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிக்க மகிழ்ச்சியானதும் சந்தோசமானதுமாகும் எனது மகளைப்போல இருக்கும் ஒவ்வொரு கலைஞர்களையும் வெளியுலகிற்கு கொணர்ந்து அவர்களின் திறமையினை பறைசாற்ற தொடர்ந்தும் நியூமன்னார் இணையம் இடைவிடாத சேவையினை வழங்க வேண்டும் இறைவனிடமும் வேண்டி நிற்கின்றேன்.

எல்லாம் இருந்தும்
நாம் மனநோயாளிகளாக இருக்கின்றோம்
இந்த சின்னப்பெண் மாற்றுத்திறனாளி -அல்ல
மாற்றத்திற்கான பேரொளி......
எழுந்தது எனது இதயத்தில் பேரொளி

சந்திப்பு -வை கஜேந்திரன் -

    

 



























மன்னார் இணையத்தின் விம்பம் பகுதியில் ..இருள் சூழ்ந்த வானத்தில் ஓர் வெள்ளி...மாற்றுத்திறனாளி எஸ்.சப்திக்காவுடனான நேர்காணல் Reviewed by Author on December 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.