ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 12 ஆவது ஆண்டு நினைவுதினத்தையொட்டி மன்னாரில் அஞ்சலி –(படம்)
ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 12 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மன்னாரில் இன்று திங்கட்கிழமை (26) காலை அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட கலை,இலக்கிய பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குனர் ஏ.ரி.மோகன்ராஜ் தலைமையில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய அலுவலகத்தில் இடம் பெற்றது.
-இதன் போது சுனாமி ஆழிப்பேரலையினால் உயிர் நீத்த உறவுகளின் 12 ஆவது வருட நினைவை, நினைவு கூர்ந்து ஒளி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
-குறித்த அஞ்சலி நிகழ்வில் இந்து மத குரு சிவசிறி மஹா தர்ம குமார குருக்கள்,மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒள்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனிமார்க், மன்னார் நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் உற்பட பலர் கலந்து கொண்டு சுனாமி ஆழிப்பேரலையினால் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து நினைவு உரைகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(26-12-2016)
ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 12 ஆவது ஆண்டு நினைவுதினத்தையொட்டி மன்னாரில் அஞ்சலி –(படம்)
Reviewed by NEWMANNAR
on
December 26, 2016
Rating:

No comments:
Post a Comment