அண்மைய செய்திகள்

recent
-

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு(NWSDB) மன்னார் மக்களின் வேண்டுகோள்----

மன்னார் மாவட்டத்தில் குடிநீரானது பைப்லைன் மற்றும் கினறு குழாய் கினறு போன்றவற்றின் மூலம் பெறப்படுகின்றது. பெரும்பாலான மக்கள் பைப்லைன் மூலம் தான் தண்ணீரை பெற்றுக்கொள்கின்றார்கள் தற்போதைய நிலையில் 24 மணி நேரமும் தண்ணீரைப்பெறக்கூடியதாக உள்ளது மகிழ்ச்சியான விடையமே....
ஆனாலும் தண்னீரானது சுத்தமான துப்பரவான தண்ணீராக வரவேண்டும் அதுதானே இல்லை......
காலையில் கறல் தண்ணீராகவும் மாலையில் கலங்களாகவும் சிறு துணிக்கைகள் துகள்கள் கூழங்களாக வருகின்றது சிறிய அளவில் நீரினை எடுக்கும் போது தெரிகின்ற போது தெளிவாகத்தெரியும்....

அதிகளவான பிரதான நீர்ப்பாவனையானது
  • குடிப்பதற்கு
  • சமைப்பதற்கு
  • குளிப்பதற்கும் அத்தோடு ஏனைய செயற்பாடுகளுக்கும் பயன்படுகின்றது. சமைப்பதற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்தும்  போது நேரடியாக கிருமிகள் உடலினுள் செல்கின்றது அதுபோல குளிக்கும் போது குழந்தைகள் முதியவர்கள் மற்றும் தொற்றுநோய்ப்பாதிப்பு உள்ளவர்கள் சத்திரசிகிச்சை மற்றும் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் கிருமி தொற்று ஏற்படவாய்ப்புள்ளது.
நீரின்றி இல்லை இவ்வுலகு என்னும் வாக்கிற்கு ஏற்ப நீரிலே இவ்வளவு கழிவுகள் வந்தால் என்ன செய்ய முடியும் மக்களால் நீர்பாசன திணைக்கள அதிகாரிகளின்  கவனத்திற்கு மிகவும் விரைவாக நல்லதொரு தீர்வை முன்வைத்து மக்களின் சுத்தமான சுகாதாரமன வாழ்விற்கு வழியமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
நீர்பாசனவடிகால் வேலைகளில் நீர் கறலாக வருவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் தொடர்ச்சியாக நீர்பாவனைக்கு உதவாத முறையில் வருவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று ஏனெனில் கட்டணம் மாதமாதம் செலுத்துகின்றோம்.

நீர் சுத்தமின்றி வருவதற்கு காரணங்களாக இருக்குமோ....!!!
  • அதிகளவான குளோறின்  கலத்தல்
  • நீர் சுத்திகரிப்பு பிர பொருட்கள்
  • பைப்லைனில் ஏற்பட்டிருக்கும்  விரிசல்கள்
  • நீர்த்தாங்கியின் தேங்கியிருக்கும் கழிவுகள்
  • பழுதடைந்த நீர்த்தாங்கிகள்
  • பழுதடைந்த நீர் இணைப்பு குழாய்கள்  இன்னும் வேறு விதமான பிரச்சினைகள் இருந்தால் காலதாமதம் இல்லாமல் உடனே நிவர்த்தி செய்து சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகும்

பாவனை அதிகமாகவும் தேவை அதிகமான தொரு விடையமாக  உள்ளதால் உடனடியாக நல்ல தீர்வை எடுக்க வேண்டும்
மன்னார் மண்ணில் குடிநீர் சுத்தமான முறையில் இல்லை என்பது தெளிவாகத்தெரிகின்றது தற்போது மன்னார் மவட்டத்தில் தோன்றியிருக்கும் பில்டர் வோட்டர் விற்பனை கடைகள் லீற்றர்- 5 ரூபாய் விற்கப்படுகின்றது நாள் ஒன்றுக்கு தேவையான நீரினை எல்லோரலும் கடைகளில் வாங்கமுடியாது ஆகவே  மிகவிரைவில் உரிய நடவடிக்கையினை  மேற்கொள்ள வேண்டுமென மக்கள் சார்பாக கேட்டு நிற்கின்றேன்

சுத்தம் சுகம் தரும்
-வை-கஜேந்திரன்-









தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு(NWSDB) மன்னார் மக்களின் வேண்டுகோள்---- Reviewed by Author on December 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.