அண்மைய செய்திகள்

recent
-

மரணப்படுக்கையில் 2 வயது குழந்தை... உடைந்த பெற்றோர்: ரூ.4 கோடி நிதி திரட்டிய பொதுமக்கள்.....


பிரித்தானியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தையின் சிகிச்சைக்கு 11 நாளில் சுமார் 4 கோடி வரை பொதுமக்கள் நிதி கிடைத்துள்ளதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் Tunbridge Wells பகுதியைச் சேர்ந்தவர்கள் Rodney Jackson(41) மற்றும் Carolyn (46). இவர்களுக்கு Florence Jackson's என்ற இரண்டு வயது குழந்தை உள்ளது.

இக்குழந்தைக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நரம்புகளில் புற்று நோய் தாக்கியுள்ளது. இப்புற்று நோய் மிகவும் மோசமானது அதுமட்டுமன்றி இது குழந்தைகள் மற்றும் இளம் வயது சிறுவர், சிறுமியர்களையே தாக்கும் என்று கூறப்படுகிறது.

குழந்தை புளோரன்சை இந்த புற்று நோயில் இருந்து காப்பாற்ற உரிய சிகிச்சை செய்ய வேண்டும். அதற்காக 250,000 பவுண்டு வரை செலவாகும் எனவும், பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என கோரி பெற்றோர் சமூகவலைதளங்களில் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அதில் ஒவ்வொரு நாளும் Florence Jackson's நிலைமை பதிவு செய்து வந்தார். இதற்கான சிகிச்சை அமெரிக்காவில் தான் செய்ய முடியும் என்றும் பதிவேற்றம் செய்திருந்தார்.

இதனால் மனம் உருகிய இணையவாசிகள் குழந்தையின் நிலையைக் கண்டு மிகவும் வருந்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் இக்குழந்தையின் நிலைமையை அறிந்தவர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு பணம் கொடுத்து உதவி செய்துள்ளனர்.

உதவி கேட்டு கோரிக்கை வைத்த 11 நாட்களில் மட்டும் அந்த குடும்பத்தினருக்கு 255,091 பவுண்டு வரை நிதி கிடைத்துள்ளது. இதில் ஒருவர் மட்டும் £45,000 கொடுத்து உதவி செய்துள்ளார்.

இது குறித்து அவரின் தந்தை கூறுகையில், இது ஒரு மறக்க முடியாத உதவி என்றும் பல நண்பர்கள் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் உதவி செய்தனர் என்று கூறியுள்ளார்.

குழந்தைக்கு 80 சதவீதமான சிகிச்சைகள் நடைபெற்று முடிந்து விட்டதாகவும், அதில் அனைத்து அறுவை சிகிச்சைகளும் சிறப்பாக நடைபெற்று முடிந்துவிட்டதாகவும், இன்னும் 20 சதவீதமே உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் இக்குழந்தையின் உதவிக்கு பிரித்தானியாவில் உள்ள 8,500 பேர் உதவி செய்துள்ளதாகவும், இது ஒரு மனிதாபிமான செயல் என்று குழந்தைக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.





மரணப்படுக்கையில் 2 வயது குழந்தை... உடைந்த பெற்றோர்: ரூ.4 கோடி நிதி திரட்டிய பொதுமக்கள்..... Reviewed by Author on January 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.