தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் இலங்கை வீரர்கள்! டி20 அணி விபரம்
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
டி20 தொடருக்கான இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி துடுப்பாட்ட வீரரும் மிதவேக பந்துவீச்சாளருமான புதுமுக வீரர் திக்ஷில டி சில்வா அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா டி20 குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான இலங்கை டி20 அணி, அஞ்சலோ மெத்தியூஸ் (தலைவர்), தினேஸ் சந்திமால் (துணைத்தலைவர்), குசால் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, தனுஷ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல, சீகுகே பிரசன்ன, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், இசுறு உதான, அசேல குணரத்ன, சச்சித்ர பத்திரண, லக்ஷான் சந்தகன், திக்ஷில டி சில்வா, நுவான் குலசேகர.
இந்நிலையில், அணியில் இடம்பிடித்துள்ள தனுஷ்க குணதிலக, சீகுகே பிரசன்ன, நிரோஷன் டிக்வெல்ல, அசேல குணரத்ன, லக்ஷான் சந்தகன், நுவான் குலசேகர ஆகியோர் நாளை தென் ஆப்ரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் இலங்கை வீரர்கள்! டி20 அணி விபரம்
Reviewed by Author
on
January 12, 2017
Rating:

No comments:
Post a Comment