500 அணு குண்டுகள் போட்டாலும் அழியாத பதுங்குகுழி வீடுகள்! அமெரிக்காவில் நிர்மாணம்!
அணு குண்டு அல்லது அது போன்ற மிகப் பெரிய அழிவில் இருந்து தப்பித்து வாழக் கூடிய விசேட நிலத்தடி பதுங்கு குழி வீடுகளை கொண்ட பிரதேசம் ஒன்றை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் தெற்கு டகோடா பிரதேசத்தில் இந்த பதுங்கு குழி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
உலக அழிவின் போது தெரிவு செய்யப்பட்ட 5 ஆயிரம் பேர் மாத்திரம் அழிவில் இருந்து தப்பித்து வாழக்கூடிய வசதிகள் இந்த பதுங்குகுழி வீடுளில் இருக்கின்றன.
தரை மட்டத்தில் இருந்து 26 அடி ஆழத்தில் அமைந்துள்ள இந்த வீடுகளில் ஒரு வீட்டில் 10 முதல் 12 பேரை வரை வசிக்க முடியும்.
5 லட்சம் தொன் எடை கொண்ட பயங்கரமான தொடர் வெடி குண்டு தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்கும் பலத்துடன் இந்த பதுங்கு குழி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த பிரதேசத்திற்கு விசேட பதுங்கு குழிகள் மற்றும் உணவு களஞ்சியம் தேவைப்படுவதுடன் அவற்றில் பெருமளவிலான பொருட்களை களஞ்சியப்படுத்த எண்ணியுள்ளனர்.
உலக அழிவில் இருந்து தப்பிக்க நிர்மாணிக்கப்படும் இந்த பதுங்கு குழி வீடுகள் 26 அடி அகலமும் 100 அடி நீளமும் கொண்டவை.
வீடுகளை கொள்வனவு செய்ய விரும்புவோர் ஒரு வீட்டை கொள்வனவு செய்ய 25 ஆயிரம் டொலர்களை வைத்துச் செய்ய வேண்டும் என்பதுடன் 99 வருடங்கள் வரை வருடாந்தம் ஆயிரம் டொலர்களை வைப்புச் செய்ய வேண்டும்.
மிகவும் விசேடமான முறையில் நிர்மாணிக்கப்படும் இந்த பதுங்கு குழி வீடுகள் மீது சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் 500 அணு குண்டுகளை ஒரே தடைவையில் போட்டாலும் எந்த ஆபத்தும் ஏற்படாது எனக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த வீடுகளை கொள்வனவு செய்ய செல்வந்தர்களின் விண்ணப்பங்கள் கிடைத்து வருவதாக வீடுகளை நிர்மாணிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அணுவாயுத தாக்குதல், இரசாயன தாக்குதல், சுனாமி, பூமியதிர்ச்சி உட்பட இயற்கை அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்கும் வீடுகளாக இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
500 அணு குண்டுகள் போட்டாலும் அழியாத பதுங்குகுழி வீடுகள்! அமெரிக்காவில் நிர்மாணம்!
Reviewed by Author
on
January 05, 2017
Rating:

No comments:
Post a Comment