வவுனியா ஒமந்தை திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது-Photos
வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் முருகன் ஆலயம் கடந்த வருடம் (12.12.2016) அன்று இரவு திருடர்களால் உடைக்கப்பட்டு ஆலய மூலஸ்தானத்திலிருந்த வேல் உட்பட ஜந்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடர்கள் திருடிச் சென்றிருந்தனர்.
குறித்த ஆலய நிர்வாக சபையினர் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு இச்சம்பவத்துடன் தொடர்புள்ள இரு சந்தேக நபர்களை இன்று (05) கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் ஒமந்தை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆலய நிர்வாக சபையினர் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு இச்சம்பவத்துடன் தொடர்புள்ள இரு சந்தேக நபர்களை இன்று (05) கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் ஒமந்தை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா ஒமந்தை திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது-Photos
Reviewed by NEWMANNAR
on
January 05, 2017
Rating:

No comments:
Post a Comment