மாணவர்களை வெளியேறுமாறு விடுக்கப்பட்டு 72 மணித்தியாலங்கள் கடந்தும் தொடர்ந்து நிர்வாக கட்டடம் முற்றுகை
விடுதி வசதி கோரி போராட்டத்தில் குதித்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர்கள் நிர்வாக கட்டடத் தொகுதியை முற்றுகையிட்டு ஒரு வாரகாலமாக அந்த கட்டடத்திலே உடமைகளுடன் தங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மாணவர்களின் இந்த முற்றுகை போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அனைத்து பீடங்களின் விரிவுரைகளும் கால வரை இன்றி தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளது.
விரிவுரைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் விடுதி உட்பட பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு பின்னர் மாணவர் நடமாட்டம் தடை விதிக்கப்பட்டு அதற்கு முன்னதாக மாணவர்கள் வெளியேற வேண்டும் என துணை வேந்தரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேற விதிக்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவடைந்து நேற்று (24) செவ்வாய்கிழமை காலை 8.00 மணியுடன் 72 மணித்தியாலங்கள் கடந்து விட்ட போதிலும் மாணவர்கள் தொடர்ந்து நிர்வாக கட்டட தொகுதியில் தங்கியுள்ளனர்.
இதேவேளை கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் விடுதி உரிமை போராட்டம் தொடரும் பொலிஸ் அழைப்பாணையின் பேரில் நேற்று (24) செவ்வாய்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜரான 10 மாணவர்களுக்கும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
அரச உடமைகளை துஷ்பிரயோகம் செய்தமை, மாணவர்களை விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைத்தமை மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் இம் மாணவர்கள் மீது பொலிஸாரினால் சுமத்தப்பட்டுள்ளன.
நேற்று முன் தினம் திங்கட்கிழமை ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் மாணவர்களுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஐ.எம். ரிஸ்வி இம் மாணவர்களை தலா 4 இலட்சம் ரூபா பெறுமதியான இருவரது சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கும் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மீண்டும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (27) ஏறாவூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 Reviewed by NEWMANNAR
        on 
        
January 25, 2017
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
January 25, 2017
 
        Rating: 
       Reviewed by NEWMANNAR
        on 
        
January 25, 2017
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
January 25, 2017
 
        Rating: 

.jpg) 

.jpg) 
 
No comments:
Post a Comment