றிஸாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் முசலி பிரதேசத்தில் முதற்கட்டமாக 85 மில்லியன் ரூபாய் பெறுமதியில் காபட் வீதிகள் அமைக்கும் பணிகள்
மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களில் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 85 மில்லியன் ரூபாய் பெறுமதியான காபட் வீதிகள் அமைக்கும் பணிகள் இன்று வியாழக்கிழமை(19) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அளக்கட்டு, வேப்பங்குளம், பிச்சை வாணிபக்குளம் ஆகிய கிராமங்களுக்கான 85 மில்லியன் ரூபாய் பெறுமதியில் குறித்த காபட் வீதிகள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று (19) வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் றிஸாட் பதியுதீனின் இணைப்புச் செயலாளரான எம்.முஜாஹிர் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க் கட்சி கொரடாவுமான றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டு குறித்த வீதி அபிவிருத்தி பணிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியை தொடர்ந்து யுத்தத்தினால் இடம் பெயர்ந்த சிறுபான்மை மக்கள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் குறித்த பிரதேசத்தில் உள்ள தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் மீள் குடியேறி வருகின்றனர்.
இவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் நோக்குடன் அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கிட்டில் அமைக்கப்பட்டு வருகின்ற குறித்த வீதியை மாகாண சபை உறுப்பினர் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.அதன் போது குறித்த நிகழ்வில் முசலி பிரதேச சபையின் முன்னாள் வேட்பாளர் எம். ரிபாயி, பள்ளி நிருவாகிகள் மற்றும் கிராம மக்கள் உற்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அளக்கட்டு, வேப்பங்குளம், பிச்சை வாணிபக்குளம் ஆகிய கிராமங்களுக்கான 85 மில்லியன் ரூபாய் பெறுமதியில் குறித்த காபட் வீதிகள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று (19) வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் றிஸாட் பதியுதீனின் இணைப்புச் செயலாளரான எம்.முஜாஹிர் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க் கட்சி கொரடாவுமான றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டு குறித்த வீதி அபிவிருத்தி பணிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியை தொடர்ந்து யுத்தத்தினால் இடம் பெயர்ந்த சிறுபான்மை மக்கள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் குறித்த பிரதேசத்தில் உள்ள தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் மீள் குடியேறி வருகின்றனர்.
இவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் நோக்குடன் அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கிட்டில் அமைக்கப்பட்டு வருகின்ற குறித்த வீதியை மாகாண சபை உறுப்பினர் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.அதன் போது குறித்த நிகழ்வில் முசலி பிரதேச சபையின் முன்னாள் வேட்பாளர் எம். ரிபாயி, பள்ளி நிருவாகிகள் மற்றும் கிராம மக்கள் உற்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
றிஸாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் முசலி பிரதேசத்தில் முதற்கட்டமாக 85 மில்லியன் ரூபாய் பெறுமதியில் காபட் வீதிகள் அமைக்கும் பணிகள்
Reviewed by NEWMANNAR
on
January 19, 2017
Rating:

No comments:
Post a Comment