யாழ் இலக்கிய வட்டத்தின் சிறப்புக் கௌரவம்அருட்திரு தமிழ் நேசன் அடிகளாருக்கு...
யாழ் இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டி கௌரவிப்பு விழா ஒன்று இடம்பெற்றது. கடந்த ஜனவரி 22ஆம் திகதி (ஞாயிற்றக் கிழமை) மாலை 4.00 மணிக்கு யாழ் நல்லூரில் இவ்விழா இடம்பெற்றது.
இவ்விழாவின்போது ஓய்வுநிலை அதிபர் திரு. வே. ஞானகாந்தன் அவர்களும் கௌரவிக்கப்பட்டார். யாழ் இலக்கிய வட்டத்தின் தலைவரும் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான பேராசிரியர் என். சண்முகலிங்கன் அவர்கள் இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார். இந்நிகழ்வின் ஆசியுரையை அருட்திரு. ரூபன் மரியாம்பிள்ளை நிகழ்த்தினார்.
இவ்விழாவின்போது அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரும் ஓய்வுநிலை அதிபர் திரு. ஞானகாந்தன் அவர்களும் பல்வேறு பெரியோர்களினால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின் வாழ்த்துரைகளை யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கே.பாலசுந்தரம்பிள்ளை யாழ் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறைத் தலைவர் பேராசிரியர் எம். வேதநாதன் பலாலி ஆசிரிய கலாசாலை முன்னாள் அதிபரும் கவிஞருமான சோ. பத்மநாதன் பலாலி ஆசிரிய கலாசாலை முன்னாள் விரிவுரையாளரும் பண்டிதருமான கலாநிதி எஸ். திருநாவுக்கரசு ஆகியோர் வழங்கினர்.
இன்னும் பண்டிதர் கடம்பேஸ்வரன் எழுத்தாளர் கே. ஆர். டேவிட் யாழ் கத்தோலிக்க இலக்கியக் கழகத் தலைவர் எழுத்தாளர் திரு. யோசப் பாலா எழுத்தாளர் பீற்றர் அபீர் குருநகர் கலைஞர் திரு. கிறிஸ்தோப்பர் என நூற்றுக்கும் அதிகமான கலை இலக்கியவாதிகள் கல்வியாளர்கள் பல்துறை சார்ந்த பெரியேர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்தக் கௌரவிப்பு விழாவை யாழ் இலக்கிய வட்டத்தின் செயலாளர் நயினை கிருபா அவர்கள் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தார்.
யாழ் இலக்கிய வட்டத்தின் சிறப்புக் கௌரவம்அருட்திரு தமிழ் நேசன் அடிகளாருக்கு...
Reviewed by Author
on
January 26, 2017
Rating:
No comments:
Post a Comment