அண்மைய செய்திகள்

recent
-

பல்கலை மாணவர்கள் படுகொலை வழக்கு விசாரணையை திசை திருப்ப முயற்சிகள் நடக்கின்றனவா? யாழ்.நீதவான் கடும் எச்சரிக்கை


யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு  விசாரணையை திசை திருப்ப முயற்சிகள் நடக்கின்றனவா என குற்ற ப்புலனாய்வு துறையினரை எச்சரித்துள்ள யாழ்.நீதவான் எஸ்.சதீஸ்கரன், அடுத்த வழக்கு தவணையில் முல் லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்கா விட்டால் அத்தியட்சகரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்படும் எனவும் கடுமையாக தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த வழக்கு தவணையின் போது வழக்கு தொடர்பாக சமர்பிக்குமாறு நீதவானால் உத்தரவி ட்ட அறிக்கைகளை குற்றப்புலனாய்வு துறையினர் நேற்றைய தினமும் சமர்ப்பிக்கவில்லை. இது குறித்தும் மிக கடுமையாக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு நீதிவான் எச்சரித்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி நள்ளிரவு யாழ்.கே.கே.எஸ் வீதி குளப்பிட்டி பகுதியில் யாழ்.பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர்கள் இருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த மாணவன் உயிரிழந்ததுடன் அதனால் ஏற்பட்ட விபத்தால் மற்றைய மாணவனும் உயிரிழந்திருந்தார்.

இச் சம்பவத்தை அடுத்து யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன் இது தொடர்பான விசாரணையானது குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டதுடன் வழக்கு நடவடிக்கையானது யாழ்.நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்றைய வழக்கு விசாரணையானது யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போது உயிரிழந்த மாணவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி வி.ரி.சிவலிங்கம் மற்றும் சட்டத்தரணி சயந்தன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்படி நேற்றைய வழக்கு நடவடிக்கையில், மன்றில் பிரசன்னமாகியிருந்த குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் நீதிவான்,

குறிப்பாக இச் சம்பவத்தை ஆரம்பத்தில் விபத்து சம்பவமாக பதிவு செய்தமைக்கான காரணம் தொடர்பான விசாரணை அறிக்கையும் அவ்வாறு விபத்து சம்பவமாக பதிவிட வேண்டும் என உத்தரவிட்ட அதிகாரி யார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கையையும் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் விசாரணை என்ற பெயரில் பாதிக்கப்பட்டவர்களிடம் முல்லைதீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாரணை நடத்தியமை தொடர்பான குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கையும் குறித்த மாணவர்களை சுடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கிகள் தொடர்பான ஆயுத களஞ்சிய பொறுப்பாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகளையும் வினாவியிருந்தார்.
இதன்போது இது தொடர்பான விசாரணைகள் இன்னமும் முடிவுறவில்லை எனவும் இது தொடர்பாக சட்டமா அதிபரிடம் தாம் ஆலோசனை பெற்றுள்ளதாகவும் மன்றில் குறிப்பிட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளும் குறித்த கொலை வழக்கில் வழக்கு கோவைகள் தொடர்பாக சட்டமா அதிபரிடம் சமர்பிப்பது தொடர்பான சட்ட ஏற் பாடுகள் போதியளவு உள்ள போதும் தற்போது குற்றப் புலனாய்வு பிரிவு சட்டமா அதிபரிடம் இது தொடர்பில் ஏன் ஆலோசனை பெறுகின்றது என தெளிவுபடுத்த வேண்டும் என்ற தமது விமர்சனத்தை முன்வைத்திருந்தனர்.

இதனையடுத்து நீதிவான் தெரிவிக்கை யில், குறித்த வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கைகளை இன்னமும் சமர்ப்பிக்காமை குறித்து குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கடும் தொனியில் எச்சரித்துடன் இவ் வழக்கு நட வடிக்கையை வேறு திசைக்கு நகர்த்துவதற்கு முயற்சிக்கின்றீர்களா எனவும் குற்றப் புல னாய்வு பிரிவு அதிகாரிகளை கடுமையான தொனியில் வினவியிருந்தார். மேலும் இந்த வழக்கு நடவடிக்கையில் இந்த கட்டத்தில் எதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனை பெறுகிறீர்கள் என்பது தொடர்பாகவும் வினவியிருந்தார்.

அத்துடன் குறித்த வழக்கு நடவடிக்கையில் பொலிஸ் திணைக்களம் மேற்கொள்ளும் விசாரணை என கூறி பாதிக்கப்பட்டவர்களிடம் முல்லைதீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொண்ட விசாரணை தொட ர்பில் மறு வழக்கு தவணையின் போது முல்லைதீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் முன்னி லை யாகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன் அவ்வாறில்லையாயின் அவருக்கு எதிராக மன்றானது பகிரங்க பிடியாணை பிறப்பித்து அவரை கைது செய்யும் எனவும் யாழ். நீதிவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் குறிப்பிட்டிருந்தார்.       

பல்கலை மாணவர்கள் படுகொலை வழக்கு விசாரணையை திசை திருப்ப முயற்சிகள் நடக்கின்றனவா? யாழ்.நீதவான் கடும் எச்சரிக்கை Reviewed by Author on January 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.