இதய சுத்தியுடனான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்: தைப்பொங்கல் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்
இதய சுத்தியுடனான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்: தைப்பொங்கல் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்
தமிழரின் எதிர்பார்ப்பாக முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பானது, நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதும், நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான தீர்வுக்கு வழிகாட்ட வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அந்த தீர்வானது இலங்கை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்திட வேண்டும் எனவும், இதய சுத்தியுடனான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்த நன்னாளில் நம்பிக்கை கொள்வோமென தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் எதிர்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தமது தைப்பொங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதய சுத்தியுடனான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்: தைப்பொங்கல் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்
Reviewed by Author
on
January 14, 2017
Rating:

No comments:
Post a Comment