நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை நியமனம் செய்யுமாறு வ.உ மயூரன் அமைச்சர் மனோகணேசனிடம் கோரிக்கை.
நீர் கொழும்பு நீதிமன்ற கட்டிட தொகுதியில் தமிழ் மொழியில் பரீட்சயமாக பேசக்கூடிய தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் மக்களின் மொழிப்பிரச்சினையை தீர்க்கும் வகையில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை நியமனம் செய்யுமாறு வடமாகாணசபை உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக வடமாகாணசபை உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன் நேற்று திங்கட்கிழமை தேசிய சகவாழ்வு கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
நீர் கொழும்பு நீதிமன்ற கட்டிட தொகுதியில் தமிழ் மொழியில் பரீட்சயமாக பேசக்கூடிய தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் இல்லாத காரணத்தால் பொது மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக அறிகின்றேன். வழக்குகளோடு சம்பந்தப்பட்ட வழக்காளிகளாக இருப்பினும், எதிராளிகளாக இருப்பினும், வழக்குத்தவணைக் காலத்திலும்,வழக்குகள் முடிவடைந்த பின்னரும் அவர்கள் தமிழ் மொழியை மட்டுமே தெரிந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
சுரியான மொழி பெயர்ப்பு இன்மையால் வழக்குகளின் நிலைமைகள்,தன்மைகளைக் கூட அறிந்து கொள்ள முடியாமல் அவஸ்த்தைப்படுகின்றவர்களை காணக்கூடியதாக இருக்கின்றது.
சொந்த மொழியில் தகவல்களை பெற முடியாத நிலை காணப்படுகின்றது.
வேறு திணைக்களங்களிலோ, அலுவலகங்களிலோ மொழி பெயர்த்துக் கூற உதவிக்கு சிலரை அழைத்து செல்வது சுலபம்.
ஆனால் நீதிமன்றங்களில் காணப்படும் இறுக்கமான கட்டுப்பாடுகள் மூலம் நினைத்தது போல் பொதுமக்கள் தமக்கு ஏற்ற யாரையும் அழைத்து செல்லவும் முடியாது.
தமிழ் பேசும் சட்டத்தரணிகளும் மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகின்றனர்.
எனவே தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை நியமனம் செய்து இம் மொழிப்பிரச்சனையை தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இல்லையேல் விசேடமான மொழிப்பெயர்ப்பாளர்களை நீதிமன்ற வளாகத்துக்குள் கடமையாற்ற தங்கள் அமைச்சினூடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
இதில் தாங்கள் உடனடியாக எடுக்கும் நடவடிக்கையானது மொழிப்பிரச்சினையால் காரியங்களை செய்து முடிக்காமல் விடப்பட்டிருக்கும் நீண்டகால, உடனடி பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வழிசமைக்கும் என நம்புகின்றேன். என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-மன்னார் நிருபர்-
நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை நியமனம் செய்யுமாறு வ.உ மயூரன் அமைச்சர் மனோகணேசனிடம் கோரிக்கை.
Reviewed by Author
on
January 03, 2017
Rating:

No comments:
Post a Comment