மன்னார் மாவட்ட அரச உத்தியோகத்தர்கள் வறுமை ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு உறுதி-(படம்)
மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று (02) புதுவருடத்தில் அரசாங்க திணைக்களின் முதல் நாள் வேலைகள் ஆரம்பமாகியதை முன்னிட்டு சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
-மன்னார் மாவட்ட செயலகம் , பிரதேசச் செயலகங்கள் உற்பட அரச திணைக்களங்களில் உத்தியோகத்தர்கள் 'வறுமை ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு' இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்து உறுதிமொழி வழங்கியுள்ளனர்.
'அரசாங்கம் 2017 ஆம் ஆண்டினை வறுமை ஒழிப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளது.
அதற்காக அரச உத்தியோகத்தர்கள் ஆகிய நாமும் அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக வறுமையை ஒழித்து இந்த நாட்டின் வளர்ச்சிக்காக உண்மையாகவும் நேர்மையாகவும் பணியாற்றுவோம்' என சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
-முசலி பிரதேசச் செயலகத்தில் முசலி பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் சக உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமானம் செய்து கொண்டு தமது கடமைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-

மன்னார் மாவட்ட அரச உத்தியோகத்தர்கள் வறுமை ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு உறுதி-(படம்)
Reviewed by Author
on
January 03, 2017
Rating:

No comments:
Post a Comment