மன்னார் மாணவர்களுக்கு உத்தேச அரசியலமைப்பு தொடர்பாக விளக்கமளிப்பு-(படம்)
வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தேச அரசியலமைப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட கருத்தரங்கு கல்வி அமைச்சும்,அரசியலமைப்பு சபையும் இணைந்து நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்தனர்.
-இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் குறித்த நிகழ்வு மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் இடம் பெற்றது.
-மன்னார் வலயக்கல்வி திணைக்களத்தின் சமூக,விஞ்ஞான பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஆர்.பிரின்ஸ் டயஸ் தலைமையில் இடம் பெற்றது.
-இதன் போது அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள் சார்பாக சட்டத்தரணி எம்.எஸ்.நவாஸ் மற்றும் சிரேஸ்ட அதிகாரி கிருஸ்னானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினர்.
உத்தேச அரசியலமைப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் குறித்த கருத்தரங்கில் மன்னார் பாடசாலைகயில் உயர்தர வகுப்பில் அரசரவியல் பாடம் கற்கின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 130 பேர் தெரிவு செய்யப்பட்டு உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(20-1-2017)

மன்னார் மாணவர்களுக்கு உத்தேச அரசியலமைப்பு தொடர்பாக விளக்கமளிப்பு-(படம்)
Reviewed by Author
on
January 21, 2017
Rating:

No comments:
Post a Comment