அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இராமர் பால காட்சி பலகை தமிழ் இலக்கியங்களின் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும் - நகர சபை முதல்வருக்கு இந்து மஹா சபை கடிதம்

 


 மன்னர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ராமர் பாலத்தின் காட்சி பலகை தொடர்பில் அண்மையில் சர்ச்சையான நிலை ஏற்பட்டிருந்தது இந்நிலையில்  ராமர் பாலத்தின் காட்சி பலகையானது மத நோக்குடன் பார்க்கப்படாமல் தமிழ் இலக்கிய நோக்கத்தோடு பார்க்கப்பட வேண்டும் என்று மன்னார் நகர சபை முதல்வருக்கு இந்து மகாசபை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது 


இராமாயண கால தமிழ் இலக்கியப் பண்பாட்டு மரபுகளுடன் தொடர்புபட்ட வரலாற்றினை எடுத்தியம்பும் வகையில் எமது மாவட்டத்தில் அமைந்துள்ள இராமர்பால அமைவிடத்தினை அடையாளப்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறை அமைச்சினால் நுழைவாயிலில் அமைக்கப்பட்ட காட்சிப்பலகையினை நாம் வரவேற்கின்றோம். இதனை மத நோக்கோடு பார்க்காமல் தமிழ் இலக்கிய வரலாறாகவே உற்று நோக்க வேண்டும். இவ்விடயத்தின் மூலம் மத நல்லிணக்கம் பேணப்படுமே தவிர பாதகம் ஏற்படாது. இதனை எதிர்ப்பது ஒரு சிலருடைய ஆதங்கத்தின் வெளிப்பாடு மாத்திரமே அத்தோடு இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இராமாயண காப்பியத்தோடு தொடர்புபட்ட இடங்களையே தெரிவு செய்கின்றனர் என்பதும் தரவுகள் அடிப்படையில் வெளிப்படையான உண்மையாகும். எனவே அவ்வறிவித்தல் பலகை அவ்விடத்தில் இருப்பது பொருத்தமானது என்பதுடன் எமது மாவட்டத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு நாம் இன மத வேறுபாடு இன்றி அனைவரும் கரம் கோர்த்து செயற்படுவோம் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது







மன்னார் இராமர் பால காட்சி பலகை தமிழ் இலக்கியங்களின் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும் - நகர சபை முதல்வருக்கு இந்து மஹா சபை கடிதம் Reviewed by Vijithan on January 09, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.