அண்மைய செய்திகள்

recent
-

-வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகனின் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு-(படம்)



தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகனின் நிதி ஒதுக்கீட்டில்  நேற்று சனிக்கிழமை(14)பல்வேறு உதவித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஐயங்கங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கு தளபாடங்களும், கோட்டை கட்டிய குளம் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கான ஒலி பெருக்கி சாதனம், அம்பலபெருமாள் குளம் விளையாட்டுக் கழகத்திற்கான சீருடைகள், கல்விளான் பாடசாலைக்கான நீர் இறைக்கும் இயந்திரம் என்பனவும் பிரதேச செயலகத்தில் வைத்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களால் உரிய அமைப்புகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்விளான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர், மல்லாவி பிரதேச வர்த்தக சங்கத்தின் செயலாளர், வன்னி குறோஸ் சுகாதார நிறுவனத்தின் மல்லாவி பிரதேச ஒருங்கிணைப்பாளர் ரமேஸ், மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 இதே வேளை மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நட்டாங்கண்டல் விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்களும், பொன்னகர், விநாயகபுரம், பூவரசங்குளம் கிராமங்களை உள்ளடக்கி தகர கொட்டகைகளும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்ததோடு தனது கருத்துக்களை தெரிவித்தார். பொது அமைப்புகளுக்கு வழங்கப்படுகின்ற இப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு மக்களின் தேவைகளுக்கு வழங்கி உதவ வேண்டும் என்றும், தொடர்ந்தும் இது போன்ற உதவித்திட்டங்கள் ஏனைய கிராமங்களுக்கும் வழங்கப்படும்.

இந்த அமைப்பு திறம்பட செயற்பட்டு கிராமங்களில் நடைபெறும் பொது நிகழ்வுகள், மரண நிகழ்வுகள் என்பனவற்றுக்கு இலவசமாக வழங்கி மக்களுக்கு பணியாற்ற முன்வர வேண்டும் என்றார்.
 இந்நிகழ்வில் பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள், கிராம பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


-மன்னார் நிருபர்-
  (15-1-2017)





-வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகனின் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு-(படம்) Reviewed by Author on January 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.