முருங்கன் கட்டுக்கரை குளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசிய வேலைத்திட்டம் குறித்து அமைச்சர் விஜித் விஜய முணி சொய்சாவிற்கு கடிதம் அனுப்பி வைப்பு(படம்)
மன்னார் முருங்கன் கட்டுக்கரை குளத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய வேலைகள் குறித்து கட்டுக்கரை குள திட்ட முகாமைத்துவ குழு நீர்ப்பாசன முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜய முணி சொய்சாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
-குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
-கட்டுக்கரை குளத்தின் கீழ் 32 ஆயிரம் ஏக்கர் வரையான விஸ்தீரணத்தில் பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.எனினும் குறித்த குளத்தினதும்,வாய்க்கால்களினதும் கொள்ளளவும்,நிரந்தரமான கட்டுமானப்பணிகளும் திருப்திகரமானதாக மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
-எனவே விவசாயிகளாகிய எம் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படும் பொருட்டு கீழ் வரும் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
-அதற்கமைவாக கட்டுக்கரை குளத்தின் வான் 2' அடியாக உயர்த்தப்படுதல் வேண்டும்.இதன் மூலம் குளத்தின் தண்ணீர் கொள்ளளவானது அதிகரிக்கப்படும்.
-கட்டுக்கரை குளத்திற்கு தண்ணீர் வரும் உள்ளீட்டு வாய்க்கால் 18 கிலோ மீற்றர் நீளத்திற்கு அகலமாக்கப்படுதல் வேண்டும்.இதனால் தண்ணீர் விரயமின்றி விரைவாக குளத்தை வந்தடையும்.
-கட்டுக்கரை குளத்தின் பிரதான வாய்க்கால்கள் அனைத்தும் இரு பக்கமும் தடுப்புச் சுவர் கட்டப்படல் வேண்டும்.
-கட்டுக்கரை குளத்தின் கீழ் வருகின்ற வாய்க்கால்கள்,ஊட்டற் குளங்களுக்கான கட்டுமான வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து கட்டுக்கரை குள திட்ட முகாமைத்துவ குழு நீர்ப்பாசன முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜய முணி சொய்சாவிற்கு குறித்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(5-1-2017)

-குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
-கட்டுக்கரை குளத்தின் கீழ் 32 ஆயிரம் ஏக்கர் வரையான விஸ்தீரணத்தில் பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.எனினும் குறித்த குளத்தினதும்,வாய்க்கால்களினதும் கொள்ளளவும்,நிரந்தரமான கட்டுமானப்பணிகளும் திருப்திகரமானதாக மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
-எனவே விவசாயிகளாகிய எம் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படும் பொருட்டு கீழ் வரும் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
-அதற்கமைவாக கட்டுக்கரை குளத்தின் வான் 2' அடியாக உயர்த்தப்படுதல் வேண்டும்.இதன் மூலம் குளத்தின் தண்ணீர் கொள்ளளவானது அதிகரிக்கப்படும்.
-கட்டுக்கரை குளத்திற்கு தண்ணீர் வரும் உள்ளீட்டு வாய்க்கால் 18 கிலோ மீற்றர் நீளத்திற்கு அகலமாக்கப்படுதல் வேண்டும்.இதனால் தண்ணீர் விரயமின்றி விரைவாக குளத்தை வந்தடையும்.
-கட்டுக்கரை குளத்தின் பிரதான வாய்க்கால்கள் அனைத்தும் இரு பக்கமும் தடுப்புச் சுவர் கட்டப்படல் வேண்டும்.
-கட்டுக்கரை குளத்தின் கீழ் வருகின்ற வாய்க்கால்கள்,ஊட்டற் குளங்களுக்கான கட்டுமான வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து கட்டுக்கரை குள திட்ட முகாமைத்துவ குழு நீர்ப்பாசன முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜய முணி சொய்சாவிற்கு குறித்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(5-1-2017)

முருங்கன் கட்டுக்கரை குளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசிய வேலைத்திட்டம் குறித்து அமைச்சர் விஜித் விஜய முணி சொய்சாவிற்கு கடிதம் அனுப்பி வைப்பு(படம்)
Reviewed by NEWMANNAR
on
January 05, 2017
Rating:

No comments:
Post a Comment