அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் மீண்டும் வாள்வெட்டு..!

வவுனியா, கற்குழி பகுதியல் நேற்று இரவு 09.50 மணியளவில் வாள் வெட்டுக்குழுக்கள் அட்டகாசம் புரிந்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
புதுவருட தினத்தன்று வவுனியா, கற்குழி பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றது. இச் சம்பவத்தில் இருவர் காயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இவ் வாள் வெட்டுச்சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சையின் பின்னர் நேற்று மாலை வீடு திரும்பியதையறிந்த சிலர் இரவு 9.45மணியளவில் முச்சக்கரவண்டியில் வந்து சிகிச்சையின் பின் வீடு திரும்பியவரை தாக்க முயன்றுள்ளனர்.
குறித்த வீட்டார் கூக்குரலிட்டு சத்தமிட்டமையினால் முச்சக்கரவண்டியில் வந்த நபர்கள் தப்பிச்சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் ஆட்டோவையும் கைப்பற்றியுள்ளர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

.s.sasi
வவுனியாவில் மீண்டும் வாள்வெட்டு..! Reviewed by NEWMANNAR on January 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.