அண்மைய செய்திகள்

recent
-

ஊர்களில் ஆற்றுப்படுத்தலை மேற்கொண்ட அரங்கு எனும் வலுவான கருவி;-Photos

டிசம்பர் 6-11 வரையான அந்த நாட்களில் யாழ்ப்பாணம்இ வன்னியைச்சேர்ந்த சில கிராமங்களில் இலகுவில் மறக்க முடியாத அரங்க நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. பெரு மரங்களின் நிழலிலும் கோவில் வளாகங்களிலும் சிறுவர்கள் பெண்கள் இளைஞர்கள் பெரியோர்கள் என மக்கள் ஒன்றுகூடியிருந்தார்கள். மேள ஒலி முழங்கிக்கொண்டிருக்க அந்தக் கூட்டம் உணர்வுகளால் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. உரத்துச் சத்தமிட்டபடி ஓடியாடி விளையாடிய சிறார்கள்இ குழந்தைகளை இடுப்பில் தாங்கியவாறு சிரித்து மகிழ்ந்து கதை பேசிய இளம்பெண்கள்இ உரையாடலில் பங்கேற்ற பெரியவர்களஇ; தாய்மார்கள்இ மாணவர்கள்இ இளைஞர்கள் எனப் பலரும் பங்குபற்றிய உணர்வுப்பகிர்வு அங்கு நடந்துகொண்டிருந்தது. அந்த அழகான உணர்வு பூர்வமான சூழலில் மக்களோடு மக்களாக ஓடியும் பாடியும் விளையாடியும் ஆடியும் ஆற்றுகை செய்துகொண்டிருந்தனர் கோல உடை தரித்த அரங்க செயற்பாட்டுக் குழுவின் தெருவெளி ஆற்றுகையாளர்கள்.

முப்பது வயதைக் கொண்ட ஒருவர் 'ஏழெட்டு வருசங்களுக்குப்பிறகு எங்கட சனம் இப்பிடி சிரிச்சிருக்கு. மகிழ்ந்திருக்குது. இந்த நிலைமையை ஏற்படுத்தின உங்கட ஆற்றுகையை பாராட்டுறம்.' என கூறியிருந்தார்.

20 வயதை நெருங்கிய இளம் பெண் ஒருவர் 'தெருவெளி ஆற்றுகை பற்றி படிச்சிருக்கிறம். ஆனால் நான் நினைச்சது வேற. இது சரியான வித்தியாசமா இருக்கு. சனத்தின்ர பங்குபற்றுதலைப் பாக்கேக்க சந்தோசமா இருக்கு.' எனக்கூறியிருந்தார்.



ஒவ்வொரு ஊர்களின் தெருக்கள் தோறும் நடந்து சென்று ஊர்மக்களையும் இணைத்துக்கொண்டு சரியானதொரு வெளியைக் கண்டடைந்து அக்களத்தை அரங்காக மாற்றி அதில் ஆற்றுகைகளை செய்யும் செயற்பாடாக இத் தெருவெளி அரங்கு இடம்பெற்றது. சக்திமிகு பெண்களை உருவாக்கும் 16 நாள் செயல்வாதத்தின் கீழ் குழுமுருளு நிறுவனத்தின் அனுசரணையோடு அரங்க செயற்பாட்டுக் குழுவினரின் தெருவெளி ஆற்றுகைகள் ஊர்கள் தோறும் இடம்பெற்றிருந்தன. டிசம்பர்6-11 வரையான காலப்பகுதியில் மண்டைதீவு இ கீரிமலைஇ புங்குடுதீவுஇ வேலணைஇ பளைஇ பள்ளிக்குடா மற்றும் இயக்கச்சி முதலான கிராமங்களில் இவர்களது அரங்கப்பயணம் நிகழ்ந்திருந்தது.

இளவயது திருமணச்சிக்கல்இ பெண்தலைமைக் குடும்பங்கள் எதிர்நோக்கும் காணி உரிமைப் பிரச்சினைகள்;இ மொழியுரிமை மறுக்கப்படுவதன் மூலம் பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள்இ புனர்வாழ்வு பெற்ற பெண்களின் நடைமுறை வாழ்வியல் பிரச்சினைகள் என்பன ஒவ்வோர் ஆற்றுகைகள் பேசும் விடயமாக அமைந்திருந்தன. எந்த ஊர்களில் இவ்வாறான பிரச்சினைகள் தலைதூக்கியிருக்கின்றன என்பதைக் களப்பணி மூலம் ஓரளவு கண்டறிந்து அதற்கேற்ப தெருவெளி ஆற்றுகை மேற்கொள்ளப்பட்டது.

தெருவெளி ஆற்றுகைகள் எனும்போது வெறுமனே நாடகம் போடுதல் என்பதல்லாமல் மக்களையும் ஒன்றிணைத்து உரையாடலுக்குரிய இடமாகவும்இ மகிழ்ந்திருந்து உரையாடி ஆடிப்பாடி அதன்மூலமான தூண்டுதல்களைப்பெற்று பிரச்சனைகளுக்குரிய தீர்வை கண்டறியும் செயற்பாடாகவும் அமைந்தது. இம்முறையானது அரங்க செயற்பாட்டுக்குழுவினரின் நீண்ட காலப் படிமுறை அனுபவம் மூலம் கண்டறிந்த அரங்க முறைமையாகத் தெரிந்தது.

அரங்க செயற்பாட்டுக் குழுவினரும் தெருவெளி அரங்கும்

அரங்க செயற்பாட்டுக் குழுவினர் 1985களிலிருந்தே இவ்வாறான தெருவெளி ஆற்றுகைகளை நிகழ்த்திஇ ஊரூராய் ஊடாடி மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள். மேடையில் நிகழ்கின்ற நாடகம் ஒன்றை தெருவெளியில் ஆற்றுகை செய்வதாய் இருந்த நிலையிலிருந்து மாற்றமடைந்து காலப்போக்கில் மக்களோடு இணைந்த நிலையில் அவர்களை பங்குபெறச்செய்வதாயும் குறை தீர்க்கும் பண்புகளைக் கொண்டதாயும் இவர்களது அரங்கப் படிமுறை வளர்ச்சி அமைந்திருந்தது.

அரங்க செயற்பாட்டுக் குழுவின் ஆற்றுகையாளர்கள் தம்மிடையே முறைவழிப்படுத்தப்பட்ட உறவுநிலையை கட்டியமைக்கப் பெற்றவர்கள். கலாநிதி க.சிதம்பரநாதனின் பட்டறை அரங்கின் மூலம்(workshop Theatre ) புடமிடப்பட்டு தம்மிடையேயான உறவுநிலை ஊடாட்டத்தினை வளர்த்தெடுத்து ஓர் குழுவாக உருவாகிய இவர்கள் மக்களோடு பழகுவதிலும் அவர்களை உற்சாகப்படுத்துவதிலும் முன் நிற்கின்றனர். ஏறத்தாழ 30 வருடகால அரங்க அனுபவக் கற்கை மூலம் தெருவெளி அரங்கு தொடர்பான சரியான புரிதலைக் கொணர்ந்ததிலும் அதற்கேற்ப ஆற்றுகையாளரை வளர்த்தெடுத்ததிலும் அரங்க செயற்பாட்டுக்குழு வெற்றி கண்டிருக்கிறதெனலாம்.

இதன் காரணமாகவே சமகாலத்தில் இவர்களால் சக்திமிகு பெண்களை உருவாக்கும் செயல்வாதத்தின் கீழ் தெருவெளி ஆற்றுகைகளோடு மக்களைச் சென்றடைய முடிந்தது. மக்களுக்கும் ஆற்றுகையாளருக்குமிடையில் ஏற்படுகின்ற ஊடாட்டம் ஆற்றுகையின் நிறைவுக்கு அப்பாலும் தொடரும். இவ் உறவுநிலையின் காரணமாகவே ஊரிலுள்ளோர் தமது குறைகளை துன்பங்களை கண்ணீரை ஆற்றுகையாளரிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.உரையாடுகின்றனர். தாமாகவே முடிவுகளை எடுக்கின்றனர்.


மக்களின் வெளிப்பாடும் மன உணர்வுகளும்

சென்ற எல்லாக் கிராமங்களிலும் இக்குழுவினருக்கான வரவேற்பு அதிகமாயிருந்தது. மொழியுரிமை தொடர்பான ஆற்றுகை நிகழ்வின் போது பலரது அனுபவப்பகிர்வுகளும் முடிவுகளும் இவ்வாறாக அமைந்தது.

'எங்கட மொழி தெரிஞ்ச அதிகாரி எல்லா அலுவலகங்களிலும் வரவேணும். அப்பதான் எங்கட பிரச்சினைகளை நேரடியா கதைக்க ஏலும். இடையில ஒரு ஆளைவச்சு கதைக்கேக்க நாங்கள் சொல்றதை அவை வடிவா சொல்லாமஇ அதிகாரி சொல்லுறதை சரியா விளங்கப்படுத்த தெரியாமஇ போன காரியமும் முடியாம சரியா கரைச்சல் பட்டிருக்கிறம்.'

'எங்கட சமூகம் முன்னேறி எங்கட பிள்ளையள் படிச்சு வரவேணும். எங்கட சமூகத்தில இருந்து எங்கட மொழி பேசுற ஆள் அதிகாரியா வந்தாத்தான் இந்த பிரச்சினை தீரும்' எனக் கூறியிருக்கிறார்கள்.

இளவயது திருமணம் பற்றிய பிரச்சினை வேலணைஇ பள்ளிக்குடா போன்ற இடங்களில் ஆற்றுகை செய்யப்பட்டது. பல காரணங்களால் இளவயதிலேயே திருமணம் நிகழ்ந்து குழந்தைகளைக் கையிலேந்திக் கொண்டிருந்த இளம்பெண்கள் கண்ணீர் உகுத்தனர்.

'சின்ன வயதில காதல் எண்டது பெரிசாத் தெரிஞ்சது. அதுக்குத் தான் இப்ப அனுபவிக்கிறம். இந்த வயதில பிள்ளயளையும் வைச்சுக்கொண்டு நிம்மதியில்லாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறம்' எனக் கூறியிருந்தார்கள்.

ஆற்றுகைக் குழுவினரில் பெரும்பான்மையானோர் பெண்களாக இருந்தமையால் குறித்த ஊர்களின் பாதிக்கப்பட்ட பெண்களை கட்டியணைத்து தேறுதல் சொல்லி ஆற்றுகையில் பங்கெடுக்கச் செய்ய முடிந்தது. இதன் மூலம் தமது பிரச்சினைகளுக்கான தீர்வைஇ முடிவுகளை தாமாகவே எடுக்கின்ற நிலைமையை உருவாக்கிக் கொடுத்தனர்.

'இளவயது திருமணம் கூடாது'

'இனி எங்கட பிள்ளைகளை இவ்வாறு சீரழிய விடமாட்டம்'

என்றவாறான முடிவுகளை அவர்கள் எடுத்திருந்தனர்.


வேலணையில் ஓர் தாய்

'இந்த பிரச்சினையளை நாங்கள் கடந்து வந்திட்டம்.இனி எங்கட சந்ததி சரியா வளர வேணும். இண்டைய நிலைமை சரியான மோசமாய் இருக்கு. இளம் பிள்ளையளின்ர சீரழிவு நிறைய நடக்குது. இப்பிடியான வேலையளை ஒவ்வொரு பள்ளிக்கூடமா செய்ய வேணும். பள்ளிக்கூடப் பிள்ளையள் இதில கலந்துகொள்ள வேணும். அப்பதான் இருக்கிற பிள்ளையளில மாற்றத்தை கொண்டுவரலாம். பாடசாலை தொடங்கேக்க நாங்கள் அனுமதி எடுத்து தாறம். தயவுசெய்து நீங்கள் எங்கட ஊருக்கு வாங்கோ.'

என அரங்க செயற்பாட்டு குழுவினரைக் கேட்டிருக்கிறார்கள். சென்ற அனைத்து ஊர்களிலும் இது நிகழ்ந்தது.

ஆற்றுகையாளர்கள் இலகுவில் மக்களோடு பழகிய விதமும் செயற்படுதிறனும் மக்களைத் தூண்ட அக்கணங்களில் அவர்களும் இணைந்து செயற்படுகிறார்கள். மக்களின் ஒன்றிணைவு ஆற்றுகையாளரை மேலும் உற்சாகப்பட வைக்கிறது. இதன் மூலமான சக்திப்பரிமாற்றம் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு வழிவகுக்கிறது.

கிராமங்களில் ஆற்றுகையாளர்கள் உள்நுழைகின்றபோது தெரிகின்ற இறுகிய முகங்கள் ஆற்றுகை நிறைவடைகின்றபோது தெளிந்தவையாக மாறியிருக்கும். பெண்கள்இ பெரியவர்களது முகமலர்வும் சிறுவர்களது குதூகலமும் மன நிறைவைத் தருவதாக அமையும். இன்றைய நிலையில் ஒவ்வோர் மனங்களுக்கும் ஆற்றுப்படுத்தல் தேவை இருக்கிறது. ஓவ்வொருவரும் நிம்மதியான மனநிலையையும் சந்தோசமான வாழ்வியலையும் விரும்புகின்றனர். அவர்களுடைய துன்பங்கள்இ கண்ணீர் கதைகள் என்பவற்றை பகிர்வதற்கான சரியான களம் தேவை. அவற்றை செய்யவல்லது அரங்கு என்பதை இந்த தெருவெளி ஆற்றுகைகள் மீண்டும் நிரூபித்திருக்கின்றன.

'எங்களுக்கு காசு பொருள் எண்டு தரத் தேவையில்லை. எங்கட மனக்குறைகள பகிர்ந்து கொள்ளுறதுக்கு இடம் வேணும். நீங்கள் எங்களோட இறங்கி வந்து கதைக்கிறீங்கள். ஆரும் இப்படி செய்யிறேல்ல. நீங்கள் நல்லா இருக்கவேணும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் அடிக்கடி வாங்கோ.'

என்று மக்கள் கூறியிருக்கிறார்கள். ஊரின் இளம்பெண்கள்இ மாணவர்கள் ஆகியோர் ஆற்றுகையாளர்களைப்பார்த்து

'உங்களைப்போல் இருக்க வேண்டும். உங்களைப்போல் வளரவேண்டும். படிக்க வேண்டும். இவ்வாறான வேலைகளில் ஈடுபடவேண்டும்'

எனக் கூறியிருக்கிறார்கள்.

ஆகஇ அரங்கின் மூலம் மனித மனங்களைப் புனரமைக்கவும் சிதைவடைந்த சமூகத்தை சரியான பண்பாட்டை நோக்கிக் கட்டியெழுப்பவும்; மலர்வான வாழ்வை உருவாக்கவும் இயலும் என்பது நிச்சயம். அதற்கேற்ப சரியான அரங்க முறைமைகளைக்கொண்டு மக்களோடு மக்களாக இறங்கி செயற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாக வேண்டும்.



அ.அனுசா




ஊர்களில் ஆற்றுப்படுத்தலை மேற்கொண்ட அரங்கு எனும் வலுவான கருவி;-Photos Reviewed by NEWMANNAR on January 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.