சவுதி அரேபியாவில் போராட்டம் நடத்தினால் இது தான் கதி: நீதிமன்றத்தின் விசித்திர தீர்ப்பு...
சவுதி அரேபியாவில் போராட்டத்தில் குதித்தவர்களுக்கு அந்த நாட்டின் நீதிமன்றம் சாட்டையடி மற்றும் நான்கு மாதம் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் பலரும் சவுதி அரேபியாவிற்கு சென்று வேலை செய்கின்றனர். அதில் ஒரு சிலர் கட்டுமானம் தொடர்பான துறைகளை பணிபுரிகின்றனர். இந்நிலையில் கட்டுமான புரியும் வெளிநாட்டவர்கள் சமபளம் தரவில்ல என்பதற்காக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
குறிப்பாக பின்லேடன் குழுமம் மற்றும் சவுதி ஓகர் நிறுவனங்களின் கீழ் பணிபுரிபவர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் தரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் தங்கள் வீட்டிற்கு பணம் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்காக போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்தின் போது பேருந்துகளையும் எரித்துள்ளனர். அரசின் உடைமைகளை பாழாக்கிய குற்றத்திற்காக போராட்டக்காரர்களுக்கு சவுதி நீதிமன்றம் 300 சாட்டையடிகள் மற்றும் நான்கு மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சவுதியில் எண்ணெய் வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சவுதி அரசும், பிற நிறுவனங்களும் பண நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது.
சவுதி அரேபியாவில் போராட்டம் நடத்தினால் இது தான் கதி: நீதிமன்றத்தின் விசித்திர தீர்ப்பு...
Reviewed by Author
on
January 05, 2017
Rating:

No comments:
Post a Comment