சுருதியை மாற்றுகிறது கூட்டமைப்பு சுதந்திரக் கட்சி அமைச்சர்களால் புதிய அரசியலமைப்பு தாமதம்! - சுமந்திரன்
அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் இதுவரை இணைந்து செயற்பட்டமைக்கு மாறாக கருத்துக்களை கூறுவதற்கு தலைப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் புதிய அரசியல் அமைப்பு பணிகள் முற்றுமுழுதாக சுமூகமாக நிறைவடையும் என எதிர்பார்க்கவில்லை எனவும் ஆகவே இந்த தடங்கல்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை உள்ளதாகவும் சுமந்திரன் கூறியுள்ளார்.
இதேவேளை அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் சந்திப்பு கட ந்த 26ஆம் திகதி நடைபெற்ற போதிலும் எந்த ஒரு கலந்துரையாடலும் இல்லாமல் 10 நிமிடங்களிலேயே அந்த சந்திப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. தமது முடிவை அறிவிப்பதற்கு மேலதிக கால அவகாசத்தை சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் கோரியதை அமுத்தே வழிநடத்தல் குழுவின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழிநடத் தல் குழுவின் இடைக்கால அறிக்கை டிசெம்பர் மாதம் 10ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நடவடிக்கையும் பிற்போடப்பட்டது.
ஜனவரி மாதம் 9ம் திகதி தொடக்கம் 11ம் திகதி வரை உபகுழுவின் அறிக்கை மீதான விவாதம் பாராளுமன்றம் நடைபெறும் போது வழிநடத்தல் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக கடந்த 5ம் திகதி நடை பெற்ற வழிநடத்தல் குழுவின் கூட்ட த்தை ஒததி வைப்பதற்கும் உபகுழுவின் அறிக்கை மீதான விவாதத்தை ஒத்தி வைப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் மீண்டும் கடந்த 26ம் திகதி கூடிய வழிநடத் தல் குழுவின் சந்திப்பு 10 நிமிடங்கள் வரையே நீடித்ததுடன் தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாமல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இந்நிலையிலேயே சுமந்திரன் புதிய அரசியல் அமைப்பு தயாரிப்பு பணி சுதந்திரக் கட்சியினராலேயே தாமதமாவதாக காட்டமுனைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுருதியை மாற்றுகிறது கூட்டமைப்பு சுதந்திரக் கட்சி அமைச்சர்களால் புதிய அரசியலமைப்பு தாமதம்! - சுமந்திரன்
Reviewed by Author
on
January 31, 2017
Rating:

No comments:
Post a Comment