அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு..!
அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்பு இன்று பதவியேற்கவுள்ளார். இது குறித்த நிகழ்வு தலைநகர் வாஷிங்டன் ‘கேபிடோல் பில்டிங்கில்’ நடக்கிறது. இங்குதான் ‘வெள்ளை மாளிகையும் அமைந்துள்ளது.
இந்த வண்ணமிகு விழாவில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, மிட்ஷல் ஒபாமா, பிற முன்னாள் ஜனாதிபதிகளான ஜோர்ஜ் புஷ், பில் கிளின்டன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன், டொனால்ட் டிரம்ப் உடனான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட் பதவி பிரமாணம் செய்து வைப்பார். ஜனாதிபதியை தொடர்ந்து துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற மைக் பென்ஸ், அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு 2.5 லட்சம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப், தனது ஆரம்ப உரையை நிகழ்த்துவார்.
இதனையடுத்து, அமெரிகாகவின் புதிய ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணி ஆகியோருக்கு பென்சில்வேனியா அவென்யுவில் இருந்து ‘வெள்ளை மாளிகை’ வரை இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்படும்.
இதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவார். ட்ரம்பின் பதவியேற்பை முன்னிட்டு தலைநகர் வாஷிங்டனில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதி அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவானார்.
தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அமெரிக்க மக்கள் பலரும் டொனால்ட் ட்ரம்ப்க்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். எனினும், அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் தான் என்பது உறுதியானமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு..!
Reviewed by Author
on
January 21, 2017
Rating:

No comments:
Post a Comment