அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் தாயும் மகனும் கிணற்றிலிருந்து சடலாமாக மீட்பு:கொலையா என சந்தேகம்(படங்கள்)

  வவுனியா ஒமந்தை பண்றிகெய்தகுளத்திலிருந்து இன்று (02.01.2016)தாயும் மகனும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிராம அலுவலர் அலுவலகத்திற்கு சென்ற மாமியார் காலை 11 மணியளவில் சிறுவனுக்கு இனிப்பு பண்டம் வாங்கி வீட்டிற்கு வந்து பார்த்த போது தாயையும்  மகனையும் காணவில்லை. இதனையடுத்து அவர்களை தேடிய போதே அவர்களது சடலம் வீட்டில் இருந்த கிணற்றில் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஓமந்தைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சமபவ இடத்திற்கு வந்த பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த சதீஸ்வரன் சுதாசினி வயது 30)இ சதீஸ்வரன் டினோஸன் (வயது 07) என்பவர்களாவர். மேலும் இது கொலையாக இருக்கலாமா?என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .



வவுனியாவில் தாயும் மகனும் கிணற்றிலிருந்து சடலாமாக மீட்பு:கொலையா என சந்தேகம்(படங்கள்) Reviewed by Author on January 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.