உயிரிழப்பு ஏற்படும் முன் எதாவது செய்யுங்கள்..! ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் கடிதம்..
வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கப்பெறாத நிலையில், இது போன்ற கடிதத்தினை முன்பும் அனுப்பியதாகவும் முதல்வர் சுட்டிக்காட்டியிருந்தார்.
குறித்த கடிதத்தில் முதல்வர் வைத்திருந்த பரிந்துரைகள் வருமாறு,
- சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு உறுதிகளை வழங்கும்பொருட்டு சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை வவுனியாவுக்கு அனுப்புதல்.
- காணாமல் போனோர், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சரியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஒரு கால எல்லையை வகுத்தல்.
- இதில் ஈடுபட்டுள்ள ஒரு பெண் , தனது மகளின் படமொன்றை ஏந்தியுள்ளார். அப்படத்தில் உங்களுக்கு (ஜனாதிபதிக்கு) அருகில் அவரது மகள் நிற்கின்றார் குறைந்தபட்சம் அவர் எங்கே இருக்கின்றார் என்பது தொடர்பில் உடனடியாக உறுதி செய்துகொள்ள முடியும் என்பதுடன், அவரை தனது தாயிடம் ஒப்படைத்தல்.
- பயங்கரவாத தடைச்சட்டம் மீளப்பெறப்படும் பட்சத்தில் பல அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டி ஏற்படும், அதனால் அச்சட்டத்தை மீளப்பெறும் நடவடிக்கையை துரிதமாக எடுத்தல். இது தொடர்பில் அரசு சர்வதேச சமூகத்துக்கு உறுதியளித்துள்ளது.
- மேலும் கடந்த சில தினங்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளமை மற்றும் கேப்பாபிளவு காணி விவகாரம் தொடர்பிலும் ஜனாதிபதியிடம் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
- அத்துடன், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் பெயரளவில் மட்டுமே உள்ளதாகவும், போராட்டத்தில் உயிரிழப்பு ஏற்படும் முன்னர் உரிய நடவடிக்கை தேவை என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழப்பு ஏற்படும் முன் எதாவது செய்யுங்கள்..! ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் கடிதம்..
Reviewed by Author
on
January 26, 2017
Rating:

No comments:
Post a Comment