ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.1 லட்சம் மாத ஊதியம்: 2018 முதல் சட்டமாகிறதா?
பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் மாதம் ரூ.1 லட்சம் அடிப்படை ஊதியம் வழங்குவேன் என இடது சாரி ஜானதிபதி வேட்பாளர் அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 23-ம் திகதி நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இடது சாரி கட்சியை சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளரான Benoit Hamon என்பவர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது, ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்றால் நாடு முழுவதும் உள்ள ஏழைகள், பணி இல்லாதவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அடிப்படை ஊதியமாக 750 யூரோ(1,21,246 இலங்கை ரூபாய்) வழங்க நடவடிக்கை எடுப்பேன் என அறிவித்துள்ளார்.
குறிப்பாக, 2,000 யூரோவிற்கு குறைவாக ஊதியம் பெரும் இளைஞர்களுக்கு 500 யூரோவும், 18 முதல் 25 வயதுடைய மற்றும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு 600 யூரோவும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
மேலும், நாடு முழுவது இந்த மாத ஊதியமானது 750 யூரோவாகவும் அதிகரிக்கப்படும் என Benoit Hamon தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளரின் இந்த அறிவிப்பை பிரான்ஸ் நாட்டின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணரான Thomas Piketty என்பவர் வரவேற்றுள்ளார்.
எனினும், முன்னாள் பிரதமரான மேனுவல் வால்ஸ் இந்த திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து விடும் என எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எதிர்வரும் 2018-ம் ஆண்டு முதல் இந்த திட்டத்தை அமுல்படுத்துவேன் என Benoit Hamon கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்து இதே திட்டத்தின் அடிப்படையில் தற்போது சுமார் 2,000 ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் வழங்கி வருகிறது.
அதே சமயம், சுவிட்சர்லாந்து நாட்டில் இத்திட்டம் தொடர்பாக அண்மையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அந்நாட்டு மக்கள் இதனை நிராகரித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.1 லட்சம் மாத ஊதியம்: 2018 முதல் சட்டமாகிறதா?
Reviewed by Author
on
January 26, 2017
Rating:

No comments:
Post a Comment