இஸ்ரோவின் புதிய உலக சாதனை.......
104 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி37 ராக்கெட் விண்ணில் பாய்ந்து உலக சாதனை படைத்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, செயற்கைக்கோள்களையும், அவற்றை விண்ணில் செலுத்தப் பயன்படும் ராக்கெட்களையும் தயாரித்து வருகிறது.
உள்நாட்டு செயற்கைக் கோள்கள் மட்டுமல்லாமல் வர்த்தக நோக்கில் வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் இன்று ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து 104 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி 37 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதில், இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக்கோள், ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ் 1-பி என 2 நானோ செயற்கைக்கோள்கள், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான 5 நானோ செயற்கைக்கோள், அமெரிக்காவின் 96 நானோ செயற்கைக்கோள்கள் என மொத்தம் 104 செயற்கைக்கோள்கள் சென்றன.
இதுவரையிலும் ரஷ்யா ஒரே நேரத்தில் 37 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியதே சாதனையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோவின் புதிய உலக சாதனை.......
Reviewed by Author
on
February 20, 2017
Rating:
Reviewed by Author
on
February 20, 2017
Rating:


No comments:
Post a Comment