19 ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு போராட்டம்
காணி தொடர்பாக கேப்பாப்புலவு மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 19 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
இந்த நிலையில் அந்த மக்களின் போராட்டங்களுக்கு பலமான ஆதரவு கிடைந்து வருகின்ற நிலையில் அவர்களின் போராட்டத்தினை களைப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அவ்வாறு செயற்படுபவர்களை அவ்விடத்தில் இருந்து விலக்குவதற்கு போராட்டத்திற்குள் ஒரு போராட்டம் நடத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அத்துடன் அரசியல் பிரமுகர்கள் சிலர் இந்த போராட்டங்களுக்கு தமது கட்சி உறுப்பினர்கள்தான் பொது சேவை செய்வதாக கூறி வருகின்றனர்.
இதன் மூலம் எமது போராட்டத்தினை பயன்படுத்தி சிலர் அரசியல் இலாபம் அடைய முயற்சிக்கின்றதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எது எப்படி நடந்தாலும் நாம் எமது போராட்டத்தில் மிகவும் உறுதியாகவே இருக்கின்றோம். எமது பூர்வீக நிலங்களில் நாம் கால் பதிக்கும் வரை எமது போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
February 18, 2017
Rating:

No comments:
Post a Comment