ரொறொன்ரொவில் 34 வருட வெப்பநிலை சாதனை முறியடிப்பு!
ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையம் இன்றய தினத்திற்கு 34வருட சாதனையை முறியடித்துள்ளது.
ரொறொன்ரோவில் 34 வருடங்களிற்கு முன்னர் இன்றய திகதியில் வெப்பநிலை 15 C, ஆக காணப்பட்டது. ஆனால் இன்று காலை 11மணியளவில் பியர்சனில் வெப்பநிலை 15.1 C ஐ எட்டியுள்ளது.
இந்நிலை தொடர்ந்து 18 C நோக்கி உயர்ந்துள்ளது என கனடா சுற்றுசூழல் அறிவித்துள்ளது. முன்னய சாதனை பிப்ரவரி 23, 1984ல் 14.9 C ஆகவும் அன்றய சராசரி பகல் நேர உயர் வெப்பநிலை -0.1 C. ஆகவும் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஒரு வாரகாலமாக இரட்டை இலக்க வெப்பநிலை கனடாவில் காணப்பட்டபோதிலும் வெள்ளிக்கிழமை பெரும்பாலும் பருவகால சூழ்நிலையாக 4 C.காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொறொன்ரொவில் 34 வருட வெப்பநிலை சாதனை முறியடிப்பு!
Reviewed by Author
on
February 24, 2017
Rating:

No comments:
Post a Comment