மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வு.(📷)
கடந்த 30 வருடங்களாக நாட்டில் இருந்த யுத்தம் காரணமாக தமிழ்,முஸ்ஸீம்,சிங்கள மக்கள் மத்தியில் ஒற்றுமை இல்லா நிலை காணப்பட்டது.ஆனால் இன்று அப்படி பிரச்சினை இந்த நாட்டில் இல்லை.இன்று எமது நாட்டில் உள்ள பிரச்சினை வறுமை என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை வெகு விமர்சையாக அனுஸ்ரிக்கப்பட்டது.
இதன் போது கலந்து கொண்டு இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின சிறப்புரை ஆற்றுகையிலேயே அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,,,.
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வை இம் முறை மன்னார் மாவட்டத்தில் பாரிய அளவில் கொண்டாட வேண்டும் என சிந்தித்தேன்.
மன்னார் நகரில் அனைவரினதும் ஒத்துழைப்புடன் சுதந்திர தின அணிவகுப்பு ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
அந்த வகையில் கடந்த காலங்களை விட இம் முறை பாரிய அளவில் சுதந்திர தின நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
கடந்த 30 வருடங்களாக நாட்டில் இருந்த யுத்தம் காரணமாக தமிழ்,முஸ்ஸீம்,சிங்கள மக்கள் மத்தியில் ஒற்றுமை இல்லா நிலை காணப்பட்டது.
-ஆனால் இன்று அப்படி பிரச்சினை இந்த நாட்டில் இல்லை.இன்று எமது நாட்டில் உள்ள பிரச்சினை வறுமை.இந்த நாட்டின் தற்போதைய ஜனாதிபதி இந்த வருடத்தில் வறுமையை ஒழிப்பதற்கு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்.
அதன் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகள்,பணியாளர்களின் கடமையாக வறுமை ஒழிப்பாகவே காணப்படுகின்றது.
எனவே மன்னார் மாவட்டச் செயலகம் முன் னெடுத்த இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம் பெற தமது ஒத்துழைப்புக்களை வழங்கிய பாடசாலை மாணவர்கள் உற்பட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் வெகு விமர்சையாக அனுஸ்ரிக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வில் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோண் கலந்து கொண்டார்.
முதலில் காலை 8.40 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தடியில் சுதந்திர தின நிகழ்வு ஆரம்பமானது.மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
அதனைதொடர்ந்து மன்னார் பாலத்தடியில் இருந்து அணிவகுப்பு மரியாதை நிகழ்வு ஆரம்பமானது.
முதலில் மன்னார் மாவட்டச் செயலக பணியாளர்கள் தேசியக்கொடியினை ஏந்தியவாறு செல்ல முப்படையினரின் அணி வருப்பு மறியாதையும் அதனைத்தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய பவணியும் இடம் பெற்றது.
குறித்த அணிவகுப்பு மறியாதையுடன் கூடிய ஊர்வலம் மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.அங்கு பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்
(4-2-2017)

Reviewed by NEWMANNAR
on
February 04, 2017
Rating:
No comments:
Post a Comment