அண்மைய செய்திகள்

recent
-

சுதந்திர தினத்தில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்திய வவுனியா மக்கள்

சுதந்திர தினம் இன்று நாடு பூராகவும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வவுனியாவில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா, தேக்கவத்தை ஏ9 வீதி பகுதியிலேயே வீதியின் இரு பகுதிகளிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு உள்ளன.

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் பெரும்பான்மையின மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் தேக்கவத்தை சுவசெவன என்னும் பெயரில் மசாஜ் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இதனை அகற்றுமாறு பொலிஸார் உள்ளிட்ட பல தரப்பிடமும் அப்பகுதி மக்கள் தெரிவித்த போதும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அப்பகுதி மக்களால் சுதந்திர தினத்தில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது அப்பகுதி மக்கள் குறித்த மசாஜ் நிலையம் தொடர்பில் முறைப்பாடு செய்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பொலிஸார் அவ்விடத்தில் இருந்து சென்று விட்டனர். இருப்பினும் தற்பொழுதும் கறுப்புக் கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன.

சுதந்திர தினத்தில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்திய வவுனியா மக்கள் Reviewed by NEWMANNAR on February 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.