காணிகளிலுள்ள எமது அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் இராணுவம்! கேப்பாப்பிலவு மக்கள் குற்றச்சாட்டு
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் விமானப்படையினர் வசமுள்ள தமது காணிகளை மீளவும் தங்களிடம் விரைவாக கையளிக்கவேண்டும் எனக்கோரி பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவு பகலாக கொட்டும் பனியையும் கொளுத்தும் வெயிலையும் பாராது பதின்னான்காவது நாளாகவும் இன்று போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமது காணிகளிலுள்ள வரலாற்று அடையாளங்கள் மற்றும் பயன்தரு மரங்கள் என்பவற்றை இராணுவத்தினர் அழிப்பதாக நேற்று மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தாம் போராட்டம் ஆரம்பித்த பின்னர் இந்த இடத்தில் வருகை தருபவர்களிடம் தமது காணிகளில் தாம் வாழ்ந்ததுக்கான பல்வேறு ஆதாரங்களாக வீடுகளின் அத்திபாரங்கள், மலசலகூடங்கள், கிணறுகள், நீண்டகால பயிர்கள் என்பவற்றை அடையாளங்களாக கூறிவந்ததாகவும்,
இந்நிலையில் தமது அடையாள சின்னங்கள் பலவற்றை முன்னரும் அழித்த இராணுவம் தாம் போராட்டம் ஆரம்பித்த பின்னரும் தங்களுடைய அடையாளங்களை அழித்து வருவதாக வேதனையுடன் குற்றஞ்சாட்டி யுள்ளனர்.
காணிகளிலுள்ள எமது அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் இராணுவம்! கேப்பாப்பிலவு மக்கள் குற்றச்சாட்டு
Reviewed by Author
on
February 13, 2017
Rating:
Reviewed by Author
on
February 13, 2017
Rating:


No comments:
Post a Comment