எச்சரிக்கைப் பலகை மீண்டும் மாற்றம்!
இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் உட்செல்லல் தடை தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என விமானப்படையினரால் நாட்டப்பட்ட அறி வித்தல் பலகை இரண்டாவது தடவையாக மீளவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த காணியை மீண்டும் கையளிக்குமாறு இருபதாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இலங்கை விமான படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணியை விட்டு விமான படையினரை உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விமானப்படையால் கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த காணிகளின் ஒருபுற வேலி அடைக்கப்படாது காணப்பட்ட நிலையில் கட ந்த 17ஆம் திகதி அந்த பகுதியில் இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் உட்செல்லல் தடை தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகு வீர்கள் என அறிவித்தல் பலகை ஒன்று போடப்பட்டது.
இதனை தொடர்ந்து இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த பெயர் பலகை இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் உட்செல்லல் தடை என மாற்றப்பட்டது.இந்நிலையில் நேற்று அந்த பெயர் பலகை மாற்றம் செய்யப்பட்டு இது விமானப்படை முகாம் உட்செல்லல் தடை என மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டு போடப்பட்டுள்ளது.
எச்சரிக்கைப் பலகை மீண்டும் மாற்றம்!
Reviewed by Author
on
February 21, 2017
Rating:

No comments:
Post a Comment