மன்னாரில் ஆரம்பமாகவுள்ள தேசிய உயர் டிப்ளோமா கற்கை நெறி விண்ணப்பம் தொடர்பாக. பா.உ. கெளரவ. இ. சாள்ஸ்
தேசிய உயர் டிப்ளோமா கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதி பெறமுடியாத மாணவர்களின் நன்மைக் கருதி கீழ்வரும் டிப்ளோமா கற்கைநெறிகள் மன்னாரில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் யாவும் என்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1.வியாபாரநிர்வாகத்தில் தேசிய உயர் டிப்ளோமா
(HND BA)
2.ஆங்கிலத்தில் தேசிய உயர் டிப்ளோமா
(HNDE)
3.சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத்தில் தேசிய உயர் டிப்ளோமா
(HNDTHM)
இக்கற்கை நெறிகள் வெற்றிகரமாக பூர்த்தி செய்வோருக்கு உடனடி வேலைவாய்ப்பு சாத்தியமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விண்ணப்ப முடிவுத்திகதி 28.02.2017
விண்ணப்ப படிவங்கள் பெறவிரும்புவோர் தமது தகுதியை நிரூபித்து எமது அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு 23.01.2017 தினகரன் பத்திரிகை விளம்பரம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 27.01.2017 அரச வர்த்தமானியைப் பார்வையிடலாம்.
தகவல்
இ.சாள்ஸ் நிர்மலநாதன்
பாராளுமன்ற உறுப்பினர் (வன்னி) மற்றும்
மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும்.
மன்னாரில் ஆரம்பமாகவுள்ள தேசிய உயர் டிப்ளோமா கற்கை நெறி விண்ணப்பம் தொடர்பாக. பா.உ. கெளரவ. இ. சாள்ஸ்
Reviewed by Author
on
February 15, 2017
Rating:

No comments:
Post a Comment